அகதிகளின் வருகைக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்..!

Read Time:3 Minute, 3 Second

அகதிகளின் வருகைக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சன் சீ’ கப்பலில் 490 தமிழ் அகதிகள் வந்திறங்கிய விக்ரோரியாவின் எஸ்கியூமோல்ட் துறைமுகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.
பல டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகவும், அகதிகளை திருப்பி அனுப்பவும், அகதிகளின் வருகையைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கப்பலில் வந்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பதாக கனடிய காவல்துறை அதிகாரி ட்ரேசி றூக் தெரிவித்தார். அத்துடன்,அகதிகள் நல்ல உடைக்களை அணிந்துள்ளனர். பயணத்தின் போது அவர்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் கிடைத்துள்ளது. கப்பலைச் சோதனையிடும் நடவடிக்கைகள் யாவும் முற்றுப் பெற்றுள்ளன. அதில் எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கப்பலில் வந்த அகதிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை கனடாவின் சிறுவர் மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சு சில சிறுவர்கள் மற்றும் தாய்மாரை தமது பாதுகாப்பில் எடுத்துக் கொண்டுள்ளது. ஏனையவர்கள் வன்கூவர் பகுதியில் உள்ள தடுப்பு நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளனர். இந்தப் பணிகள் எதிர்வரும் திங்களன்று ஆரம்பமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை கப்பலில் வந்த அகதிகளில் 27 பேர் விக்ரோரியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வன்கூவர் தீவின் சுகாதார அதிகாரசபை பிரதம மருத்து அதிகாரியான மருத்துவர் றிச்சர்ட் குறோ தெரிவித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்ற பின்னர் திரும்பியுள்ளனர்.
தற்போது இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் சனிக்கிழமைக்குப் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டு விடுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடல் நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது..!
Next post காஸ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா மீதும் காலணி வீச்சு..!