அமெரிக்க முப்படைக் குழு இலங்கை வருகை..!

Read Time:1 Minute, 8 Second

இலங்கையில் மனிதாபிமான சேவைகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்க முப்படையினர் குழு ஒன்று ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவின் வான், கடல், தரை மற்றும் பொதுச் சுகாதார சேவையைச் சேர்ந்த நாற்பது பேர் அடங்கிய குழுவினரே இலங்கை வந்துள்ளனர்.  இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வைத்திய மற்றும் கட்டிட நிர்மாண பயிற்சிகளை இவர்கள் வழங்குகின்றனர். நேற்று முதல் இவர்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். புத்தளம் , செட்டிக்குளம், அனுராதபுரம், மதவாச்சி ஆகிய இடங்களில் மருத்துவ மற்றும் பாடசாலை புனர்நிர்மாணப் பணிகள் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என அமெ. தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் – ஐக்கிய தேசியக்கட்சி..!
Next post கம்பவாரிதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந் கண்கலங்கியுள்ளார்..!