இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகையில் வீழ்ச்சி–தமிழக காவல்துறையினர்..!

Read Time:1 Minute, 59 Second

இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கடந்தக காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவான எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழ் அகதிகளே தமிழகத்தில் அடைக்கலம் கோருவதாக தமிழக காவல்துறை பொறுப்பதிகாரி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தின் புதிய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் அதிகளான இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்பி வருவதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். ஜனவி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் 1280 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 849 பேர் மட்டுமே நாடு திரும்பியதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜுலை மாத இறுதியில் நடத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி தமிழகத்தில் 112 முகாம்களில் 71654 பேரும், வெளியிடங்களில் 32467 பேரும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி 2010 ஜூன் மாதம் வரையில் 64 நாடுகளில் 146098 இலங்கையர்கள் அகதி அந்தஸ்துடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்யாவில் இரு எரிமலைகள் வெடிப்பு 33,000 அடி உயரத்தில் புகைமூட்டம்..!
Next post மன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு..!