உலகின் மிகப் பெ..ரி..ய.. செல்லப்பிராணி..!

Read Time:1 Minute, 31 Second

பொதுவாக செல்லபிராணிகள் என்பது நம்முடன், நமது சூழலில் வாழ்வற்கு பழகிக்கொண்ட சிறிய இன விலங்குகள்தாம். எனினும் சிலர் கொடிய காட்டுவிலங்குகளையும் தங்கள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதுண்டு. அவ்வகையான நபரைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது!  ஜிம் – லிண்டா சவுத்தர் என்ற கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் காட்டெருமை ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர். பெயிலி ஜே.என்.ஆர் என இவ்விலங்கிற்கு பெயரும் இட்டுள்ளனர்.  இவர்களே தற்போது உலகின் மிகப்பெரிய செல்லப் பிராணியை வளர்த்து வருபவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.  இவர்களின் 2 வயதான இந்தச் செல்லப் பிராணியின் நிறை என்ன தெரியுமா? 725 கிலோ கிராம் ……! அம்மாடியோ……!  மிகவும் செல்லமாக இவர்களுடன் வாழ்ந்துவரும் செல்லப்பிராணி, இவர்களுடன் காரிலும் பயணிக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா?  இதோ, இவரும் செல்லப்பிராணியும் சேர்ந்து செய்யும் குறும்புகளை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கத்துக்கு சவர்க்காரமிட்டு நீராட்டும் அதிசய நபர்..!
Next post யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள்..!