தெற்கு மாணவர்கள் மட்டுமன்றி வடக்கு மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றர்–மங்கள சமரவீர..!

Read Time:1 Minute, 37 Second

தெற்கு மாணவர்கள் மட்டுமன்றி வடக்கு மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மாணவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்திய அரசாங்கம் தற்போது மாணவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக திகழும் ஒவ்வொரு தரப்பினரையும ஒன்றன் பின்னர் ஒன்றாக அரசாங்கம் ஒடுக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் அரசாங்கமே குழப்ப நிலைமைகளை ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டாக இணைந்து இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைத் தமிழர் மீள்குடியேற்றம் இந்திய அரசு உரிய நடவடிக்கை: சோனியா காந்தி..!
Next post சர்ச்சைக்குரிய சூதாட்ட சட்டம் பாராளுமன்றில் இன்று விவாதிக்கப்படவுள்ளது..!