எனக்கும் ஜெனிலியாவுக்கும் செம பொருத்தம்-தனுஷ்..!

Read Time:1 Minute, 26 Second

உத்தமபுத்திரன் படத்தில் எனக்கும் நாயகி ஜெனிலியாவுக்கும் நல்ல பொருத்தம், சரியான கெமிஸ்ட்ரி என்று புளகாங்கிதப்பட்டுக் கூறியுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள படம் உத்தமபுத்திரன். தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. வழக்கம் போல இதுவும் தனுஷ் டைப் படம்தான். காமெடி, காதல், குடும்பக் கதை என்று கலவையாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் தனுஷுடன் ஜோடி போட்டுள்ளார் ஜெனிலியா. இதுகுறித்து சந்தோஷமாக உள்ளார் தனுஷ். காரணம், அவருக்கும், இவருக்கும் கெமிஸ்ட்ரி சரியாக ஒத்து வந்ததாம். இதுகுறித்து தனுஷ் கூறுகையில், ஜெனிலியா ஒரு பக்கா புரபஷனல். திரையில் எங்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இப்படம் ஒரு முழு நீள குடும்பப் படமாகும். கலப்படமில்லாத காமெடியைக் கொடுத்துள்ளோம். இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் இணைந்து நான் தரும் 3வது படம். இது சந்தோஷமாக உள்ளது என்றார் தனுஷ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்ச்சைக்குரிய சூதாட்ட சட்டம் பாராளுமன்றில் இன்று விவாதிக்கப்படவுள்ளது..!
Next post நான் கடவுளுக்கு நன்றி சொல்கின்றேன்-ஐஸ்வர்யா ராய்..!