விக்ரமை வியக்கவைத்த அமலா..!

Read Time:2 Minute, 12 Second

விக்ரம் – அனுஷ்கா நடித்துக் கொண்டிருக்கும் தெய்வ மகன் படத்தில் இணையும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார், அமலா பால்!  ‘சிந்து சமவெளி’க்காக தனது பெயரை அனகா என மாற்றிக் கொண்டவர், அப்படத்தின் சர்ச்சையை அடுத்து ‘மைனா’ படத்துக்காக அமலா பால் என்ற தனது நிஜப் பெயரையே வைத்துக் கொண்டார். தீபாவளிக்கு வெளியான ‘மைனா’வைப் பார்த்த கோடம்பாக்கத்துக்கு படைப்பாளிகள் சிலர், அமலா பாலின் கால்ஷீட்டுக்கு அப்ளை செய்திருக்கிறார்களாம். களவாணி பட இயக்குநர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ‘மதராசப்பட்டினம்’ விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தெய்வ மகன்’ படத்துக்கு நடிகை அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதில், இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அமலா பாலை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அண்மையில் தனது குடும்பத்தினருடன் மைனா படத்தைப் பார்த்த விக்ரம், அதில் அமலாவின் நடிப்பைக் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே, தான் நடித்து கொண்டிருக்கும் ‘தெய்வ மகன்’ படத்துக்கு அமலா பாலை பரிந்துரை செய்திருக்கிறார் விக்ரம். அப்படத்தில் ஏழு வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடிக்கிறார். அவருக்கு உதவும் நேர்மையான வழக்கறிஞராக வருகிறாராம் அனுஷ்கா. விக்ரமுக்கு மனைவியாக நடிக்கவிருக்கிறாராம் அமலா பால்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சல்மான்கானுடன் படுக்கையறை காட்சியில் அசின்..!
Next post பிரமிடு ரொம்ப வீக்.. காம்பவுண்டு ஸ்டிராங்..!