டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!

Read Time:1 Minute, 12 Second

சகல கையடக்க தொலைபேசி பாவனையாளர்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பயன்படுத்தும் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. “இதுதொடர்பான சுற்று நிருபம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் சகல கையடக்கத் தொலைபேசி இணைப்புச் சேவை வழங்குனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என ஆணைக்குழுவின் தலைவர் அனுஷா பெல்பிட தெரிவித்தார். டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சிம் அட்டைகளை பதிவு செய்து கொள்ளாத வாடிக்கையாளர்களினது இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.  புதிய சட்டத்தின் பிரகாரம் ஒரு தனிநபர் 5 சிம் அட்டைகளுக்கு மேல் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைனா படத்துக்கு ரஜினி பெரும் புகழாரம்- நடிக்காமல் போனதற்காக ஏக்கம்..!
Next post இலங்கை குடியேற்றவாசிகளின் மேன்முறையீட்டுக்கு ஆதரவாக ஆஸி, நீதிமன்றம் தீர்ப்பு..!