வெளிநாட்டிலுள்ள புலிகள் அமைப்பின் இரகசியங்கள்…

Read Time:2 Minute, 9 Second

வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சிலவற்றின் இரகசியங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக, கோத்தபாய தெரிவுத்துள்ளார். இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இந்த அமைப்புகள், மிகவும் நேர்த்தியாக்ச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த அமைப்பு, பெருந்தொகைப் பணத்தை அரசியல்வாதிகளுக்கும், இராஜதந்திரிகளுக்கும், மற்றும் பி.ஆர் கம்பெனிகளுக்கும் கொடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (அதாவது பி.ஆர் கம்பெனிகள் என்பது பப்பிளிக் ரிலேஷன் ஆகும்).

அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் யு.எஸ்.டி.பக்(USTPAC) என்னும் அமைப்பு, பல இராஜதந்திரிகளோடு தெடர்புடைய அமைப்பு என்றும், இந்த அமைப்பில் உள்ள டாக்டர் எலியஸ் ஜெயராஜா என்பவர், தமது செல்வாக்கினூடாக பலரை அணுகி இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திவருகிறார் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த அமைப்பு இலங்கைக்கு எதிராக பல ராஜதந்திர காய் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இதன் காரணமாக இலங்கை அரசானது, பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. இந் நிலையில், மேற்குறிப்பிட்ட அமைப்பால், தமக்கு பாரிய நெருக்குதல் ஏற்பட்டுள்ளது என்றும், இவர்களே புலிகளின் நவீனகால கூலிப்படைகள் என்றும், இலங்கை பாதுகாப்பு இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜபக்ஷ புதல்வர்களுக்கு, றேசிங் கார் வாங்குவதற்கு 993 லட்சம் கிடைத்தது எவ்வாறு?
Next post இலங்கை அரசின் மற்றுமோர் பழிவாங்கல்.. பிரையன் செனவிரட்னவை சிங்கப்பூர் நாடுகடத்தியது