பாராளுமன்றத்தில் சம்பந்தன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்துக்களே…
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம் கோரவில்லை என பாராளுமன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அப்பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பாலும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களையே பேசுகின்றனர். கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தும் அல்ல என அரியநேத்திரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகும். சம்பந்தனின் உரையை ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை.
Average Rating