சுரேஷ் எம்.பி அரசியல் கோமாளி பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வர்ணிப்பு…

Read Time:2 Minute, 8 Second

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்த அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்வின் எழுச்சியை (திவிநெகுமவை) ஆதரிப்பார்களேயானால், அவர்கள் கோமாளிகள் எனக் கூறியிருக்கும் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன், தான் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாத ஒரு அரசியல் கோமாளி என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரச பங்காளி கட்சிகள் இல்லாதொழிக்க முற்படும் பொழுது அதனை பலப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் எடுக்கப்பட்ட முயற்சியின் பிரகாரமே நான் உட்பட 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அபிலாசைகளை ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம். யாழ்.மாவட்டத்தின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை விசமத்தனமாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கொச்சப்படுத்துகின்றார்.

யார் எதைச் செய்தாலும் அது எமது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயமாக இருக்கின்றதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தாங்கள் தான் தலைவர்கள் என்ற மமதையில் தமிழ் மக்கள் விடயத்தில் நன்மை செய்யும் ஏனைய அரசியல் தலைவர்கள் ஊடகம் மூலமாக கேவலப்படுத்துவது இன்று சர்வசாதாரணமாகி விட்டது எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் நான்கு புலிகள் கைது.., வெடி குண்டு தயாரித்ததற்கான ஆதாரங்களும் மாட்டின…
Next post அம்பாறையில் கடலோரம் ஒதுங்கிய கடற்பாம்புகள்…