நோர்வே கண்டேனரில் புலிகளுக்கு வந்த FM ரேடியோ ஒலிபரப்பிகள்!

Read Time:1 Minute, 53 Second


சமாதான காலத்தில் நோர்வே நாட்டில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ரேடியோ ஒலிபரப்பிகள் இறக்குமதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் இயங்கி வந்த புலிகளின் குரல் வானொலிக்கு நோர்வே நாட்டில் இருந்து ஒரு கண்டேனர் வந்துள்ளது. நோர்வே நாட்டின் இராஜதந்திரிகளுக்கான பொருட்கள் வரும், கண்டேனரில் இந்த வானொலி உபகரணங்கள் வந்ததால் அதனைச் சோதனையிடும் அதிகாரம் அப்போது, இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு இருக்கவில்லை. இதன் காரணமாக எவ்வித தடையும் இன்றி கொழும்பு வந்த இச் சக்திவாய்ந்த FM ஒலிபரப்பு உபகரணங்கள், அப்படியே வன்னி சென்று, புலிகள் கைகளில் ஒப்படைக்கப்பட்டது என்று, விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அக்காலப் பகுதியில் இலங்கை அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த சமாதானப் பணிப்பாளர் பேர்னாட் குணதிலவே, நோர்வே அரசிடம் இந்த உபகரணங்களை இறக்குமதி செய்து தருமாறு தெரிவித்தார் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கான நோர்வே தூதுவராக ஜோன் வெஸ்ட் பேர்க் இருந்தார். பின்னர் இவர் சிங்கள அரசியல்வாதிகளின் பாரிய அழுத்தத்தால், மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலி, பெர்லுஸ்கோனி விவாகரத்து: மாதம் 40 லட்சம் டாலர் ஜீவனாம்சம்
Next post பாதாள உலகக்கோஷ்டி உறுப்பினர் ‘போம்ப சிர’ கொலை!