புலிகளின் பரிதி படுகொலை: பிரெஞ்சு பாம்பு குருப்புக்கு மேல் பழிபோடும் பிரெஞ்சு பொலிஸ்!

Read Time:2 Minute, 30 Second


பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட புலிகளின் பரிதி அவர்களின் விசாரணைகளில் தொய்வு நிலை காணப்படுகிறது. துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வேளை, அதிக நாட்டம் காட்டிய பிரெஞ்சுப் பொலிசார், தற்போது விசாரணைகளை கிடப்பில் போட்டு விட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் லாசெப்பலில் இயங்கி வருவதாகக் கூறப்படும் பாம்பு குரூப்புக்கும், இக்கொலைக்கும் தொடர்பு இருப்பதாக, சில நபர்களிடம் பிரெஞ்சுப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்த பாம்பு குரூப் என்று அழைக்கப்படும் கும்பலில், சில தமிழ் இளைஞர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. சில அல்ஜீரிய இனத்தவர், மற்றும் ஆபிரிக்க இனத்தவர்களும் இக்கும்பலில் அடங்குவார்கள் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகையதொரு கும்பலால் புலிகளின் பரிதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இக்குழுவுக்கும் இலங்கை அரசுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பொலிசார் இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும், புலிகளின் பரிதி அவர்களின் கொலை வழக்கை பொலிசார் இதுவரை சரியாக விசாரிக்கவில்லை என்ற, விசனம் தமிழ் மக்களுக்கு மத்தியில் இருப்பதோடு, பிரான்ஸ் பொலிஸ் நினைத்திருந்தால் குற்றவாளிகளை எப்போதோ கைது செய்திருக்கலாம் என்றும் மக்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு தடையாக இருக்கும் காரணிகள் யார் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அரசாங்கம் குற்றச்சாட்டு
Next post Happy NEWYEAR!!!!!!! -Nitharsanam.net