பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் அதை ஜாலியாக அனுபவிக்க வேண்டும்!

Read Time:2 Minute, 13 Second

ANI.Sex.Girl.001
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் அதை ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், இந்தோனேசியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தோனேஷியாவின் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடைபெற்றது. அப்போது நீதிபதி டாமிங் சனுசி என்பவரிடம், கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா? என நேர்காணல் நடத்தும் குழுவினர் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த நீதிபதி, பலாத்காரம் செய்யும் நபரும், அதனால் பாதிக்கப்படும் நபரும் இதை விரும்பும் பட்சத்தில் இக்குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்றார்.

அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை, பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்கள் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார். இதைக் கேட்ட அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

நீதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு பதவி அளிக்கக் கூடாது. பணி நியமன உத்தரவை கேன்சல் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனால் சுதாரித்த சனுசி, டென்சனை மறக்க இவ்வாறு ஜோக் அடித்ததாக கூறி சமாளித்தார். பின் தான் தெரிவித்த கருத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை
Next post என் பணத்தை உலகில் உள்ள ஏழைகளுக்காக செலவிட விரும்புகின்றேன்: பில்கேட்ஸ்