இன்றைய ராசிபலன்கள்:02.03.3013

Read Time:8 Minute, 7 Second

Raasipalan-001
மேஷம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

மிதுனம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

கடகம்
இன்றைய தினம் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல் – வாங்கலில் சுமுகமாக நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

சிம்மம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

கன்னி
விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

துலாம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

விருச்சிகம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்-. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

தனுசு
இன்றைய தினம் திருப்திகரமாக இருக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மகரம்
காலைப் பொழுதிலிருந்தே மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வாகனப் பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

கும்பம்
நீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

மீனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் -ரணில்
Next post மணமகளை பல்லக்கில் தூக்கும் கனேடிய தமிழர்! (VIDEO)