இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (03.03.2013)

Read Time:5 Minute, 33 Second

Raasipalan-001
மேஷம்:
இன்று, சான்றோரின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரம் செழிக்க, கூடுதல் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். ஆதாய பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்:
இன்று, உங்களின் பணித்திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். கடினம் என்று ஒதுக்கி வைத்த செயல், எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சியும், சாதனையும் உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம்:
இன்று, சிலரின் தேவையற்ற விமர்சனத்தால், மனவருத்தம் கொள்வீர்கள். வாழ்வின் லட்சியங்களை உணர்ந்து, செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது. விலை மதிப்புள்ள பொருளை, கவனமுடன் பயன்படுத்தவும்.

கடகம்:
இன்று, உங்களின் பேச்சு, செயலில் கூடுதல் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவில் தாமதம் இருக்கும். பிறர்பொருளை, பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம். புத்திரரின் நற்செயல், மனதை மகிழ்விக்கும்.

சிம்மம்:
இன்று, உங்கள் வாழ்வில் கூடுதல் நன்மை பெற, புதிய அனுகூலம் உருவாகும். வாய்ப்பை பயன்படுத்தி, முன்னேற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு, எளிதாக நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கன்னி:
இன்று, உங்களின் நல்ல செயலை, அவமரியாதை செய்யும் விதத்தில் சிலர் பேசுவர். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபார நடைமுறை வளம் பெற, கூடுதல் பணிபுரிவது அவசியமாகும். முக்கிய செலவுக்கு, சேமிப்பு பணம் பயன்படும். உணவுப்பொருள் தரம் அறிந்து, உண்பது நல்லது.

துலாம்:
இன்று, உங்கள் எதிர்கால நலன் பற்றி, அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்க, சிலமாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். உறவினர்களிடம் கூடுதல் அன்பு, பாசம் வளரும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

விருச்சிகம்:
இன்று, உங்கள் செயலில் அதிக நிதானம் பின்பற்ற வேண்டியதிருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் உருவாகிற, இடையூறு சரிசெய்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். விலை மதிப்புள்ள பொருட்களை, கவனமுடன் பயன்படுத்த வேண்டும். நண்பருடன், வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது.

தனுசு:
இன்று, உங்களின் கடந்தகால, இனிய நினைவுகளில் மகிழ்வீர்கள். வசீகர பேச்சால், புதியவர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, சிறப்பாக பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

மகரம்:
இன்று, உங்கள் எண்ணத்திலும், செயலிலும் உறுதித்தன்மை இருக்கும். புதிய நடைமுறைகளை விருப்பமுடன் பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். பழைய விவகாரத்தில், சாதகமான தீர்வு வந்து சேரும்.

கும்பம்:
இன்று, சிலரது வீண்பேச்சு உங்கள் மனதில், தர்மசங்கடம் உருவாக்கும். சூழ்நிலை தாக்கத்தை ஒதுக்கிவைத்து, பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். முக்கிய செலவுக்கு, கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். காலமுறை உணவு பழக்கம், உடல் நலம்பெற உதவும்.

மீனம்:
இன்று, எதிர்பாராமல் உருவாகிற பணியினால், அதிருப்தி கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்க, நண்பரின் உதவி கிடைக்கும். பிறர்பார்வையில் அதிகமான பணச்செலவு, செய்ய வேண்டாம். உடல்நலத்திற்கு, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். போக்குவரத்தில், கவனநடை நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொதிக்கும் எண்ணெயில் கைவிடும் வினோத மனிதர் (VIDEO)
Next post பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என்பவர் மோசடி துஸ்பிரயோக சம்பவத்தில் கைது