இன்றைய ராசிபலன்கள்:07.03.3013

Read Time:8 Minute, 41 Second

raasipalangal
மேஷம்
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

மிதுனம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லை கள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

கடகம்
இன்றையதினம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். கையில் காசுபணம் புரளும். பிரியமானவர்களுக் காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்பவருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளால் லாபத்தை பெருக்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்
எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தேதீர்வு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாகனத்தை மாற்றுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

கன்னி
பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி யுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்
இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள். வயிற்றுவலி, தலைசுற்றல் விலகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்
இன்றைய தினம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

தனுசு
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மகரம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

கும்பம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மீனம்
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போரக்கு 2500 ரூபா அபராதம்
Next post தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கி சுடு, கோசல வர்ணகுலசுரிய மறுப்பு