இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க உங்கள் ராசியைப் பாருங்கள் (12.03.2013)

Read Time:5 Minute, 33 Second

Raasipalan-003
மேஷம்:
இன்று, உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். மனதில் உள்ள சஞ்சலம், நல்ல சூழ்நிலை உருவாகி மாற்றம் பெறும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி, நிறைவேற்றுவது நல்லது. பணவரவு சிறுசெலவுகளுக்கு பயன்படும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

ரிஷபம்:
இன்று, இஷ்டதெய்வ அனுக்கிரகத்தால் முக்கியமான செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். இயன்ற அளவில் அறப்பணி புரிந்து மகிழ்வீர்கள்.

மிதுனம்:
இன்று, உங்களின் திட்டமிட்டசெயல் இனிதாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர், பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி வியத்தகு முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்:
இன்று, உங்களிடம் உதவிபெற்று, நன்றி மறந்த சிலரை நினைத்து, மனம் வருந்த நேரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக, கூடுதல் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பராமரிப்பு மேற்கொள்வதால், பயணமுறை எளிதாகும். தாயின் அன்பு, ஆசி மனதுக்கு ஆறுதல் தரும்.

சிம்மம்:
இன்று, உங்கள் மனதில் பலநாள் இருந்த குழப்பமான எண்ணம் சரியாகும். ஆன்மிக நம்பிக்கை வளரும். தொழில், வியாபார வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். ஆதாய பணவரவை, அத்தியாவசிய செலவுக்கு பயன்படுத்துவீர்கள். உறவினர் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

கன்னி:
இன்று, உங்களின் செயல்களில் முன்யோசனையும், தேவையான சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். சிரமம் குறைந்து நற்பலன் அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். சராசரி பணவரவுடன், நிலுவைப்பணம் வசூலாகும். வீட்டை அழகுபடுத்த, கலை அம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

துலாம்:
இன்று, சுற்றுச்சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து பேசுவீர்கள். நடைமுறைவாழ்வு சுமுகமாக அமைந்திடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள். பணவரவில் நல்ல முன்னேற்றம் உண்டு. விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:
இன்று, உங்களின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். உறவினர் ஒருவரின், பாசம் நிறைந்த பேச்சு வியப்பைத் தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக தகுந்த பணிபுரிவீர்கள். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். காலக்கெடு தவறிய உணவுப்பொருள், கவனக்குறைவால் வாங்க நேரிடலாம்.

தனுசு:
இன்று, உங்களின் முக்கியமான செயல் ஒன்று, நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். இரக்க மனம் உள்ளவர்களிடம் உதவிபெற முயற்சி செய்வீர்கள். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இயங்கும். சேமிப்பு பணம், முக்கிய செலவுகளுக்கு பயன்படும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

மகரம்:
இன்று, உங்களின் மதிநுட்பம் நிறைந்த ஆலோசனை, நண்பரின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சிறப்பாக பணிபுரிவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். வீட்டில் குதூகலம் ஏற்படும்.

கும்பம்:
இன்று, சிலரது பேச்சு உங்கள் மனதை சங்கடப்படுத்தும். பெருந்தன்மையுடன் நடந்து, நற்பெயரை காத்திடுவீர்கள். அதிக முயற்சி, உழைப்பினால் தொழில் வளம் சீராகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். தவிர்க்க இயலாத வகையில், புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம்.

மீனம்:
இன்று, உங்கள் நண்பரின் உதவியால் பலவித நன்மையும் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு விலகும். உற்பத்தி, விற்பனை செழித்து தாராள பணவரவு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொடல்களின் கவர்ச்சி போட்டோ ஷூட்கள் உருவாகும் விதம் (கிளுகிளுப்பான வீடியோ)
Next post (VIDEO) மேக்கப் பண்ணும் போது பூனம் பாண்டேயின் அயிட்டங்களை டச் பண்ணிய அதிர்ஷடசாலி… !