கர்ப்பிணிகளே! இந்த மாதிரி ஸ்டைல் பண்ணாதீங்க!!

Read Time:4 Minute, 12 Second

19-pregnancyஇன்றைய காலத்தில் ஃபேஷன் என்ற பெயரில் நிறைய செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களை கர்ப்பமாக இருக்கம் பெண்களுள் சிலரும் பின்பற்றுகின்றனர். இதனால் அழகாகத் தான் இருக்கும். ஆனால் உடல் நலம் பாதிப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே அத்தகைய செயல்களை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இப்போது அந்த செயல்களில் எவற்றை கர்ப்பிணிகள் செய்யலாம். செய்யக்கூடாது என்பதைப் பார்போமா!!!

உயரமான ஹீல்ஸ்- தற்போது செருப்புகளில் ஹீல்ஸ் இருக்கும் செருப்புகள் தான் அதிக பிரபலம். அவற்றை சாதாரணமாக இருக்கும் போது அணிந்தாலே உடலுக்கு ஆபத்தானது. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது அணிந்தால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அசம்பாவிதம் நடக்க நேரிடும். அதிலும் கருசிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இத்தகைய செருப்புகள் அணிவதை தவிர்ப்பது நல்லது.

டைட்ஸ்- ஆடைகளில் பலவிதமான டிசைனில் உடைகள் வந்துள்ளன. அவற்றில் நிறைய பெண்கள் அணிவது டைட்ஸ் தான். இத்தகைய டைட்ஸ் உடலை இறுக்கி, உடலை சிக்கென்று காண்பிக்கும். இவற்றை கர்ப்பிணிகள் நிச்சயம் அணியக்கூடாது. ஏனென்றால் இவற்றால் அடிவயிற்றிற்கு அழுத்தம் ஏற்பட்டு, கருவிற்கு பிரச்சனை ஏற்படும்.

மேக்-கப்- இந்த காலத்தில் மேக்-கப் போடாமல் இருக்கும் பெண்களைப் பார்ப்பதே கஷ்டம். எந்த பெண்ணும் மேக்-கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அதிலும் அழகுப் பொருட்களில் சாதாரணமாக பயன்படுத்தும் லிப்ஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் தான் பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடியவை. எப்படியெனில் இதில் உள்ள கெமிக்கல் சிறிது வயிற்றில் சென்றாலும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து தான். ஆகவே கர்ப்பிணிகள் அழகுக்காக நெயில் பாலிஷ் போடுவதற்கு பதிலாக மருதாணியை அரைத்து வைக்கலாமே!

ஹேர் கலர்- ஹேர் கலரிங் என்பது அனைவரும் செய்யும் ஒரு செயல் தான். இதை கண்டிப்பாக கர்ப்பமாக இருக்கும் போது செய்யக்கூடாது. ஏனெனில் அனைத்து ஹேர் கலரிலும் அம்மோனியா உள்ளது. ஆகவே இதில் இருந்து வரும் வாசனையை நுகரும் போது குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை அடிக்கடி ஏற்படும். அதனால் எதையுமே சரியாக சாப்பிட முடியாது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது கெமிக்கல் கலந்த ஹேர் கலரை பயன்படுத்துவதை விட, இயற்கை பொருட்களான ஹென்னாவை பயன்படுத்தலாம்.

உள்ளாடை- கர்ப்பிணிகள் எப்போதும் உள்ளாடையை இறுக்கமாக அணியக்கூடாது. ஏனெனில் அவ்வாறு அணிந்தால் கர்ப்ப காலத்தில் உடலில் சுரக்கும் பால் உற்பத்தி தடைபடும். ஆகவே அத்தயை இறுக்கமான உடையை தவிர்த்துவிட வேண்டும்.

ஆகவே கர்ப்பிணிகளே! மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, நடந்து வந்தால், உடலில் எந்த பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை பங்களாவில் விபசாரம்: ரகசிய அறையில் இளம்பெண் மீட்பு – 3 பேர் கைது!!
Next post 51 வயது அழகியின் உள்ளாடை போடாத உடம்பு!!(PHOTOS)