விலைமாது ரோலை விரும்பிக் கேட்டு நடிக்கும் ஸ்ருதிஹாசன்..!!
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ என்பது பழமொழி. தமிழ் சினிமாவில் இந்த பழமொழி பலருக்கு பொருந்தினாலும் குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் குடும்பத்திற்கு மிக பொருத்தம்.
அப்பா பிரபலமான நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் வினியோகஸ்தர் இப்படி பல அவதாரங்கள் எடுப்பவர்… அம்மா சரிகா பிரபலமான டான்சர்… பிரபல நடிகை…. இந்த ஜோடியின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் முன்பு பாடகி இப்போது பிரபலமான ஹீரோயின்… அப்பாவின் அதிரடிகளைப்போலவே இவரும் திடீரென ஏதாவது அதிரடியை களம் இறக்குவார்…
சமீபத்தில் பிரபலமான ‘அந்த’ மாதிரி கவர்ச்சிப்பட புத்தகமான மேக்சிம் இதழுக்கு டாப்லெஸ் மாதிரியான படு சூடான போட்டோக்களை வாரி வழங்கி ஸ்ருதிஹாசன் சினிமா உலகை சூடு படுத்தியிருந்தார்… இப்படி ‘ஹாட்’ படங்களை எடுப்பதற்கு தன் ஆடை குறைப்பதற்கு ஸ்ருதிக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக தரப்பட்டிருக்கிறது.
இந்த விவரங்கள் எதுவுமே தந்தை கமலுக்கு தெரியாதாம்… காரணம், ஸ்ருதியின் தனிப்பட்ட விஷயங்களில் அப்பா கமல் தலையிடுவதில்லையாம்…(மெய்யாலுமே… நம்புங்க)
இந்த கேக்சிம் மேக்சிமம் டாப்லெஸ் கவர்ச்சிப் படங்கள் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்ருதி அடுத்த அதிரடியை செய்திருக்கிறார்…அதாவது மராத்தியைச் சேர்ந்த விபச்சார அழகியாக ஒரு படத்தில் ஸ்ருதி நடித்திருக்கிறார். அதிலும் இப்படி ஒரு கேரக்ட்ரை விரும்பிக் கேட்டு நடிக்கிறாராம். வழக்கம் போல் அப்பாவைப் போல் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் கேரக்டரில் நடிக்க்கிறார். அதற்கிடையில் இந்த படப்பிடிப்பு குறித்தோ… படத்தில் இப்படி ஒரு முஸ்லீம் அல்ல்து விலைமாது கேரக்டரில் நடிப்பது குறித்தெல்லாம் கமலிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லையாம். படத்தில் மிக யதார்த்தமாகவே… ரொம்ப தாராளமாகவே ஸ்ருதி நடிப்பிலும், கவர்ச்சியிலும், ஆடை குறைப்பிலும் கலக்கியிருக்கிறார்…
ஸ்ருதியுடன் அர்ஜூன்ராம்பால், இர்பான்கான், ரிஷிகபூர், நாசர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.சீனியர் நடிகைகளே விலைமாது கேரக்டரில் நடிக்க தயக்கம் காட்டும்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்ருதிஹாசன் பழக்கப்பட்ட நடிகைபோல இது போன்ற கதாபாத்திரங்களில் யதர்த்தமாக< நடித்திருப்பது சினிமா உலகினரை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது... இப்போது இந்த செய்தியின் முதல் பாராவில் சொன்ன பழமொழி சரியாக வருகிறதா...
Average Rating