சவுதியில் மனைவி வெளிநாடு சென்றால் கணவருக்கு SMS!!

Read Time:2 Minute, 21 Second

சவுதி அரேபியாவில் பெண்கள் தமது கணவர் அல்லது தந்தையின் துணை இல்லாமல் நாட்டை விட்டு வெளியே செல்கிறார்களா என்பதை, சவுதி அரசு எலட்ரானிக் முறையில் மானிட்டர் செய்யும் திட்டத்தை கடந்த வாரம் முதல் அமல்படுத்தியுள்ளது.

இதை அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், அப்படியொரு மானிட்டரிங் முறை உள்ளது தெரியவந்துள்ளது.

images (2)கடந்த வாரத்தில் இருந்து சவுதி பெண்கள் நாட்டை விட்டு வெளியே செல்லும்போது, அந்த பெண்களின் ஆண் பாதுகாவலர் (கணவர் அல்லது தந்தை) சவுதி இமிகிரேஷனில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் அறிவிக்கப்படுகிறார். இதில் தமாஷ் என்னவென்றால், அந்த பெண் நாட்டை விட்டு வெளியே சென்றது அவரது கணவருடன் என்றாலும், எஸ்.எம்.எஸ். வருகிறது!

கடந்த ஆண்டு சவுதி பெண்களுக்கு கார் செலுத்தும் உரிமை வேண்டும் என்று குரல்கொடுத்த பெண்ணுரிமைவாதி மனால் அல்-ஷெரீஃப், இந்த விவகாரத்தை போட்டு உடைத்துள்ளார்.

“எனக்கு தெரிந்த தம்பதிகள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள ரியாத் விமான நிலையம் சென்றிருந்தபோது, விமானம் ஏறுமுன், கணவருக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. சவுதி ஏர்போர்ட் இமிகிரேஷனால் அனுப்பப்பட்ட அந்த எஸ்.எம்.எஸ்.ஸில், ‘உங்கள் மனைவி, ரியாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்கிறார்’ என குறிப்பிடப்பட்டிருந்தது” என்று தமது ட்விட்டரில் தகவல் வெளியிட்டிருக்கிறார், மனால் அல்-ஷெரீஃப்.

அதையடுத்தே இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. சவுதி அரசு இது பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் உள்ள கணவர்தான் பாவம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது சிறுமியை கடத்தி வல்லுறவு புரிந்த 16 வயது சிறுவன்!!
Next post தந்தையால் சீரழிக்கப்பட்ட இரு சிறுமிகள்: தந்தைக்கு 39 வருட கால கடூழியச் சிறை!!