சரளமாக தமிழ் பேசும் நந்திதா!!
Read Time:1 Minute, 16 Second
“அட்டக் கத்தி”,”எதிர்நீச்சல்” போன்ற படங்களில் நடித்த நந்திதா “நளனும் நந்தினியும்” அத்தோடு “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
முதல் இரண்டு படங்களிலும் நடித்த போது தமிழே தெரியாமல் ரொம்பவே கஷ்டப்பட்ட நந்திதா தொடர்ந்து தாய் மொழியான கன்னட படங்களிலேயே நடிக்க சென்று விடலாம் என்று கூட நினைத்தாராம்.
அதையடுத்து அவரை படங்களுக்கு “புக்” செய்ய சென்றவர்கள் தமிழ் வசனங்களை கன்னடத்திலும் சொல்லி அவருக்கு எளிதாக புரிய வைத்தார்கள்.
இதனால் ஓரளவு தமிழும் புரியத் தொடங்கியதாம். கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக தமிழ் பேச பயிற்சி எடுத்து வந்த நந்திதா இப்போது சரளமாக தமிழ் பேசுகிறார்.
இதுவரை நந்திதாவுக்கு தமிழ் தெரியாது என்று தவிர்த்த இயக்குனர்கள் இப்போது அவரை அணுகத் தொடங்கியுள்ளனர்.
Average Rating