கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும்…
மிளகும், மிளகாய், மஞ்சல் தூளும் சேர்த்து கரைத்து ஊத்தி அபிசேகம் செய்கிறார்கள். உங்கள் உடம்பில் சிரங்கு, சொறி, கடி போன்ற பிரச்சனை உங்களுக்கு இருந்தால் இப்படிபட்ட அபிசேகத்தை நீங்களும் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.
பச்சை மிளகாய் அபிசேகம் : பச்சை மிளகாய் கரைத்து ஊத்தி அபிசேகம் செய்கின்றார்கள்… காச்சல், ஆஸ்மா, சளிபிடித்தல், தும்மல் போன்ற வியாதிகளுக்கு ‘பச்சை மிளகாய் அபிசேகம்’ செய்தால் குணமாகும்
மிளகாய் தூள் அபிசேகத்தில் கலந்து கொள்வதற்காகவும், பார்ப்பதற்காகவும் கூடியிருக்கும் மக்கள்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சவ்வாஸ்புரத்தில் வைகாசி மாத பொங்கல் திருவிழாவையொட்டி, மாரியம்மன் கோயிலில் ஆண்களும், பெண்களும் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்காலை சேர்ந்த மீனவரின் வலையில் சிக்கிய 2,500 கிலோ எடை கொண்ட புள்ளி திமிங்கிலம் மீன்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
பத்தனம்திட்டா அருகே உள்ள கோன்னி வனசரகத்தில் பன்றிகளுக்கு வைத்த கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை.
மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொராகாட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி தாய் யானையும், குட்டியும் பலியாகின. அப்பகுதி மக்கள் சோகத்துடன் பார்க்கின்றனர்.
மோப்ப நாய்களுக்கு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சிகளை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பகுதியில் போலீசார் அளிக்கின்றனர்.
திருப்பூர் நிப்ட்-டி மற்றும் பூமான்ஞ் நிறுவனம் சார்பில் பேஷன் ஷோ
Average Rating