அபிஷேக் பச்சனுடன் இணைகிறார் அசின்!!
ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அசின். கொலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போன அசின், தொடர்ந்து அங்கேயே செட்டிலாகி ஆமிர்கான், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்ஷய் குமார் ஜோடியாக கில்லாடி 786 படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராத காரணத்தால், புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தார்.
இதற்கிடையே, அவர் அமெரிக்க மாப்பிள்ளையை மணக்கப் போவதாக தகவல் வெளியானது. பிறகு பிரபுதேவாவுடன் நெருங்கி பழகுவதாக பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் அப்செட் ஆனவர் வீட்டில் முடங்கிக் கிடந்தார்.
தற்போது அந்த சூழலில் இருந்து மீண்டு புதிய படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அசின்.
ஒருவருடமாக படங்களில் நடிக்காமல் இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜெர்மன் மொழி கற்றுக்கொண்டாராம். ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் அசினுக்கு பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating