விண்வெளியில் இருந்து வகுப்பு எடுத்த முதல் சீனப்பெண்

Read Time:1 Minute, 47 Second

034பூமியை சுற்றிவரும் விண்வெளி நிலையமான டியான்காங் – 1 இலிருந்து சீன விண்வெளி வீராங்கனையான வாங் யாபிங் புவியில் உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.

வாங்யாபின் சீன மாணவர்களுக்கு விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அறிவியல் வகுப்பை சுமார் 45 நிமிடம் எடுத்துள்ளார்.

இதனால் சீனாவின் முதல் விண்வெளி ஆசிரியை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

விண்வெளியில் ஏற்படும் எடையிழப்பு மற்றும் அதனால் புவியீர்ப்பு சக்தியின் பாதிப்பு ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி நேரடியாக 330 பள்ளிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இதனை சுமார் 6 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்த்துள்ளனர்.

இவர் சீனாவின் 2 வது விண்வெளி வீராங்கனையாவார்.

சீனாவின் விண்வெளி நிலையமான டியான்காங்குக்கு வாங்யாபிங் உள்ளிட்ட 3 பேர் சமீபத்தில் ஷென்ஸென விண்கலத்தில் சென்றிருந்தனர்.

சீனா தனக்கென விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த நிலையம் 2020 ம் ஆண்டு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா- இலங்கை போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தவர்கள் கைது
Next post தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர் சுதந்திரக் கட்சியில் இணைவு