விபச்சாரியாக நடித்தால் ரசித்து விட்டு போக வேண்டியதுதானே – ஸ்ருதி!!(VIDEO)
கமலின் மகள் படங்களில் படுகவர்ச்சியாக நடிப்பதை பலரும் பல விதமாக விமர்சித்து வருகின்றனர்.ரசிகர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு ஹீரோவின் மகள் இப்படி ஆபாசமாக போஸ்கள் கொடுப்பது சரியல்ல என்றும் அவர் மேக்ஸிம் செக்ஸ் பத்திரிகைக்கு கொடுத்த போஸ்களை விமர்சனம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் இப்போது புதிதாக ‘டி-டே’ என்ற ஹாலிவுட் படத்தில் விபச்சாரி கேரக்டரில் ஆபாசமாக நடிப்பதற்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதுகூறித்து கருத்து கூறியிருக்கும் ஸ்ருதிஹாசன் “கவர்ச்சியான நடிப்பை கலைக்கண்ணட்டத்தோடு பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறும்போது :
நான் எல்லை தாண்டி கவர்ச்சியாக நடிக்கிறேன் என்று என்னை விமர்சிக்கின்றனர். சினிமா என்பது ஒரு தொழில் நடிக்க வந்த பிறகு கதையின் என் கேரக்டர் என்னவோ அதில் முழுமையாக ஈடுபடவேண்டும்.
நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய நிலை வரும்போது அந்த ட்ரெஸ்சில் நடிக்கத்தான் வேண்டும். அது தவறல்ல. விலைமாது கேரக்டரில் நான் ஆபாசமாக நடிக்கிறேன் என்கின்றனர். கலை கண்ணோட்டத்தோடு அதை பார்க்க வேண்டும். நிறைய நடிகைகள் விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்களை யாரும் விமர்சிக்கவில்லை.
ஆனால் என்னை மட்டும் குறை சொல்கிறார்கள். ‘டி-டே’ கதை எனக்கு பிடித்ததால் விலைமாதுவாக நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நடித்தால்தான் திறமையை வெளிப்படுத்த முடியும். விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது.
திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகும் சினிமாவில் நடிப்பேன். எனக்கு கணவராக வருகிறவரிடம் திருமணத்துக்கு முன்பே சினிமாவில் போக தடை போடக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொள்வேன். சினிமாவில் நடிக்க சம்மதிப்பவரையே திருமணம் செய்து கொள்வேன்.
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
Average Rating