பாஸ்டன் குண்டுவெடிப்பு, போலிச் சான்றிதழ் காட்டி ரூ. 3 கோடி இழப்பீடு பெற்ற பெண் கைது..!!

Read Time:3 Minute, 4 Second

download (6)அமெரிக்க மரதன் போட்டி குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறி போலிச் சான்றிதழ் காட்டி, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3 கோடி இழப்பீடு பெற்ற பெண் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மரதன் போட்டிகள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். போட்டியில் திடீரென அடுத்தடுத்து வெடித்த இருகுண்டுகளால் 3 பேர் பலியானார்கள், பலர் படுகாயமடைந்தார்கள்.

இக்கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மற்றும் காயமடைந்தவர்களுக்கு பொருளாதார உதவி புரிந்திடும் நோக்கத்தில் ‘ஒன் ஃபண்ட் பாஸ்டன்’ என்ற தொண்டு நிறுவனம் நிதி வசூலித்தது.

இதில், கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் வசூலான 6 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் நியூயார்க் நகரில் வசித்து வரும் ஆண்ட்ரியா என்ற 26 வயது இளம் பெண் ஒருவர் பாஸ்டன் குண்டுவெடிப்பில் மூளைக் காயம் அடைந்த தனக்கும் இழப்பீடு வேண்டும் என மருத்துவ சான்றிதழோடு மனு கொடுத்தார்.

சான்றிதழ் சரி பார்த்தபின் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3 கோடி இழப்பீடு வழங்கியது ஒன் பண்ட் பாஸ்டன் தொண்டு நிறுவனம்.ஆண்ட்ரியா கொடுத்தது

போலிச் சான்றிதழ் என தொண்டு நிறுவனத்திற்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் இழப்பீடுக்க்காக வழங்கிய மருத்துவச் சான்றிதழ் போலியானது என்பது உறுதியானது.

இதனையடுத்து, ஆண்ட்ரியா கவுஸ் மீது மசாசூசெட்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடியும் வரை ஆண்ட்ரியாவை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

ஆண்ட்ரியாவின் போலி மருத்துவ சான்றிதழ் எதிரொலியாக இதுவரை பாஸ்டன் குண்டுவெடிப்பில் இழப்பீடு பெற்ற அனைவரது மருத்துவச் சான்றிதழ்களையும் மறுஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட்டுக்கோட்டையில்; பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு..!
Next post தாயைக் காண சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை..!!