தமன்னாவை அக்ஷய்குமார் கழற்றிவிட்டதற்கு காரணம் ஸ்ருதியா..?

Read Time:2 Minute, 5 Second

 

682467065Untitled-1

விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் “ரமணா”. மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.

அக்ஷய்குமார் நாயகனாக நடிக்க வானம் படத்தை இயக்கிய கிரிஷ் படத்தை இயக்குகிறாராம். தமிழில் ஏற்கனவே இருந்த கதைக்கருவை அப்படியே வைத்துக்கொண்டு ஹிந்தி இரசிகர்களை கருத்தில் வைத்து பல திருத்தங்களை செய்திருக்கிறார்களாம்.

அதோடு, இன்றைய சூழலுக்கேற்ப பிரமாண்டத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறார்களாம். மேலும், கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது தமன்னாவை முன்வைத்தாராம் கிரிஷ்.

ஆனால், அவர் ஹிந்தியில் அஜய்தேவ்கானுடன் நடித்த முதல் படமான ஹிம்மத்வாலா தோல்வியடைந்து விட்டதால், அவரை தனக்கு ஜோடியாக்குவதில் அக்ஷய்குமாருக்கு விருப்பமில்லையாம்.

அதனால், தற்போது பரபரப்பு நடிகையாக பேசப்படும் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்கலாம் என்று தனது யோசனையை தெரிவித்தாராம். இதையடுத்து அவரை மும்பைக்கு அழைத்து பேசி அட்வான்சும் கொடுத்து விட்டார்களாம்.

ஆனால், இந்த சேதி தம்னனாவின் காதுகளுக்கு சென்றபோது ஷாக்காகி விட்டாராம். அதோடு, ஸ்ருதிதான் தனக்கு எதிராக ஏதோ உள்விளையாட்டு வேலைகளை செய்து தன்னை வெளியேற்றி விட்டார் என்று தனது அபிமானிகளிடத்தில் சொல்லிக்கொண்டு திரிகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய டிரைவர் துபாயில் அடி வாங்கும் காட்சியால் பரபரப்பு (VIDEO)
Next post கொழும்பில் பலத்த காற்றால் மரம் முறிந்ததில் ஒருவர் பலி; பல வீடுகள் சேதம்..!!