சீனாவில் செல்போன் வெடித்து வீடு சேதம்..!!
சீனாவில் செல்போன் வெடித்ததில் ஒரு வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. எனினும் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சீனாவில் சம்சுங் எஸ் 3 செல்போன் வெடித்து பெண் ஒருவர் பலியாகினார். அதற்குள் மறுபடியும்ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது, மற்றொரு சாம்சங் எஸ் 4 ஒன்று வெடித்து ஒருவரது மொத்த வீடும் எரிந்து போயுள்ள சம்பவம் உலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் வெடிக்கும் போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரிய அசம்பவித சம்பவமோ, உயிர் இழப்போ எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த சம்சுங் நிறுவன உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டின் உரிமையாளரிடம் நடந்ததை கேட்டு அறிந்துள்ளனர்.
அவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கவும், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating