”நான் ஒரு பெண்”.. விக்கிலீக்ஸ்க்கு அமெரிக்க ரகசியங்களைத் தந்த பிராட்லி..!!
வில்லிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியங்களைத் தந்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பிராட்லி, தான் ஒரு பெண் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 25 வயதான பிராட்லி மேனிங். அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய 7 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகள் மற்றும் போர்க்கள வீடியோ காட்சிகள் போன்றவற்றை ரகசியமாக எடுத்து விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு கொடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு பிராட்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நீதிமன்றம் பிராட்லிக்கு 35ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் ‘என்.பி.சி.’ தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிராட்லி மேனிங் தான் ஒரு பெண் எனக்கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
Average Rating