வன்னியில் இருந்து மேலும் 45 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைவு..!!

Read Time:2 Minute, 6 Second

SAM_6340இலங்கை இராணுவத்தின் தரைப் படையில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று(26) திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப்பிரிவில் இணைப்பதற்காகவே இவர்கள் தெரிவாகியுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் தோற்றிய தமிழ் பெண்களில் 45 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி  மற்றும் மலையகத்தை சேர்ந்த தமிழ் யுவதிகளுடன் 10 சிங்கள யுவதிகளும் இன்றைய தினத்தில் இராணுவத்தில் இணைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்வதற்காக வன்னி தலைமையகத்தில் சிறப்பு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமது பிள்ளைகளை இராணுவத்தில் இணைத்த பெற்றோர், கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ செயலாளருமான மேஜர் ஜெனரல் கிரிசாந்த சில்வா, வன்னி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, இராணுவ பொலிஸ் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் விஜயசிறி உட்பட இராணுவ அதிகாரிகள், இராணுவத்தில் இணைந்து கொண்டோரின் பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

SAM_6298 SAM_6318 SAM_6324 SAM_6360 SAM_6340 SAM_6336 SAM_6333 SAM_6331 SAM_6328 SAM_6393 SAM_6399 SAM_6401 SAM_6407 SAM_6416 SAM_6428 SAM_6436

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம் பெண்ணாக வேடமணிந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இராணுவ அதிகாரி-
Next post சிறுபான்மையின பெண்கள் இருவருக்கு விருதுகள்..!!