4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், ஆக 3,900 பேர் தான் மனித நேயம் உடையவர்களா ?

Read Time:2 Minute, 24 Second
download (10)வணக்கம் ,

2006ம் ஆண்டு திருகோணமலையில் நடந்த மாணவர் படுகொலை பற்றி, நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். 5 அப்பாவி மாணவர்களை இலங்கை கடற்படையினர் காந்தி சிலைக்கு கீழ் வைத்து சுட்டுக்கொன்றார்கள். இவர்களில் ஒரு மாணவன் பெயர் ரகீகர். இவரின் தந்தை மருத்துவர் மனோகரன் இன்றுவரை தனது பிள்ளை மற்றும் அவனது நண்பர்கள் கொல்லப்பட்டதுக்கு எதிராகப் போராடி வருகிறார். அவருக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கைகொடுத்து வருகிறது. இன் நிலையில் , இக் கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை மகிந்தரைக் கோரவுள்ளது. அதற்கு சுமார் 10,000 கையெழுத்துக்கள் தேவை. ஆனால் இதுவரை 3900 கையெழுத்துக்களே கிடைக்கப்பெற்றுள்ளது. சுமார் 4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், ஆக 3,900 பேர் தான் மனித நேயம் உடையவர்களா ? சற்றே சிந்தியுங்கள் தமிழர்களே !

சர்வதேச மன்னிப்புச் சபை தனது இணையத்தில் கையெழுத்துகளை தான் கோருகிறது. அவை இரகசியமாகப் பாதுகாக்கப்படும். ஆக உங்கள் பெயர் , மற்றும் நீங்கள் வசிக்கும் நகரத்தின் பெயர் மற்றும் உங்கள் மின்னஞ்சலை போட்டால் போதும். அதில் கூட உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சலை மற்றவர்கள் பார்க்க கூடாது என்று நீங்கள் கிளிக் செய்தால், அதனை பிறரால் பார்க்க முடியாது. அத்தோடு, உங்கள் கையொப்பமும் இணைத்துக்கொள்ளப் படும். இவ்வாறு அனாமதேயமாக ஆவது உங்கள் கையெழுத்துகளை போடுங்கள் தமிழர்களே…  எமது ஒற்றுமைய இதிலாவது காட்ட நாம் முற்படுவோம்.  உங்கள் பேஃஸ் புக் மற்றும் ரிவீட்டர் போன்ற அனைத்து சமூக வலையத்தளங்களில் இதனை இணைக்க மறக்கவேண்டாம்.  நன்றி.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவீதா மரணம் எதிரொலி: அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக நடந்தேறியது முதல் கருக்கலைப்பு..!!
Next post புதைத்த 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பி வந்த பெண்..!!