பெற்றோர் அசிரத்தை; பொலிஸார் மாணவர்களை அழைத்து வருகை..!!

Read Time:2 Minute, 12 Second

download (2)பெற்றோரின் அசிரத்தை காரணமாக 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்குச் செல்லாமல் வீடுகளிலிருந்த 7 மாணவர்களை பொலிஸார் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவமொன்று மட்டக்களப்பு கல்குடா பகுதியில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் கடந்த ஞாயிறன்று மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது அப்பகுதியில் இருந்து ஏழு மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்காதிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பரீட்சை நிலை யத்திற்கு பொறுப்பான அதிகாரி பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு மேற்படி நிலைமையை தெரியப்படுத்தினர் கல்குடா பொலிஸார் இப்பகுதி சிவில் பாதுகாப்பு குழுக்களின் உதவியுடன் செயற்பட்டு மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று இவர்களை பரீட்சைக்கு அழைத்து வந்துள்ளனர்.

பெற்றோர்கள் மாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாமல் அக்கறையின்றி காணப்பட்ட தாகவும் ஒரு வீட்டில் பரீட்சைக்கு தோற்றும் மாணவி ஒருவர் தனது தாய் வீட்டில் இல்லாமையால் தனது இளைய தம்பியை பாராமரித்துக் கொண்டிருந்துள்ளார்.

பொலிஸார் செய்வதறியாது குறித்த அந்தப் பிள்ளையை மாத்திரம் விட்டு விட்டு ஏனையோர்களை அழைத்து வந்து சேர்த்ததாக கல்குடா பொலிஸ் நிலைய அதிகாரி ஐ.பி. அருண் வீரசிங்க தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திடீரென்று டாப்ஸைக் கழற்றி மேயரை மிரள வைத்த பெண்..!!
Next post அழைப்பு கிடைத்தால் பொன்சேகா நவநீதம்பிள்ளை சந்திப்பு..!!