கழிவறையை வீடாக மாற்றிய குடும்பம்..!!

Read Time:4 Minute, 8 Second

1843article-240வீடு­க­ளுக்­கான தேவை அதி­க ­ரித்­துள்ள நிலையில் இடங்­க­ளுக் ­கான மதிப்பு மற்றும் அதி­க­ரித்­துள்ள வாடகை போன்­ற­வற்­றுக்கு வழக்­கத்­துக்கு மாறான தீர் ­வாக சீனாவைச் சேர்ந்த குடும்­ப­ மொன்று கழி­வ­றை­யொன்றை வீடாக மாற்­றி­யுள்­ளது.

ஷெங் லிங்ஜுன் என்ற 33 வய­தான சீனர் ஒருவர் வேலை தேடி ஷென்யங் நக­ருக்கு 2006ஆம் ஆண்டில் குடி­பெ­யர்ந்­துள்ளார். அங்கு வாட­கைக்கு வீடொன்­றினை பெறு­வ­தற்கு அவரால் முடி­ய­வில்லை.

ஆதனால் ஹோட்டல் ஒன்­றினால் பயன்­ப­டுத்­தப்­பட்டு கைவி­டப்­பட்ட 20 சதுர மீற்றர் அள­வான ஆண்கள் கழி­வ­றையை வாட­கைக்குப் பெற்று அதனை வீடாக மாற்­றி­யுள்ளார்.

பாதணி திருத்­து­ந­ரான ஷென், 2010ஆம் ஆண்டில் திரு­மணம் செய்து இந்த கழி­வறை வீட்­டி­லேயே தேவி என்ற குழந்­தை­யையும் பெற்று வாழ்­கின்றார். இங்கு தங்­கு­வ­தற்கு ஷெங், வரு­டத்­திற்கு சுமார்  2 இலட்சம் ரூபாவை வாட­கை­யாக செலுத்­துகிறார்.

ஷெங் அவ­ரது வீட்­டைப்­பற்றி கூறு­கையில், ‘இது சிறிய வீடுதான். ஆனால் பூர­ண­மா­னது. தற்­போதும் சிறுநீர் கழிக்கும் யூரி­னல்கள் இங்கு உள்­ளன. இருப்­பினும் ஏற்­கெ­னவே நான் இருந்த இடங்­களை விட இது சிறப்­பாக உள்­ளது’ என்­கிறார்.

கழி­வ­றை­யாக இருந்­தாலும் கட் டில், தொலைக்­காட்­சிப் பெட்டி என இடத்­திற்கு ஏற்­ப­வாறு தங்­க­ளுக்கு தேவை­யா­னதை இவர்கள் இங்கு மேற்­கொண்­டுள்­ளனர். ஆனாலும்   கூரைக்­குமேல் தற்­போதும்  பயன்­பாட்­டி­லுள்ள கழி­வ­றை­க­ளி­லி­ருந்து குழாய் வழி­யாக யூரி­ன­லுக்கு வரும் கழி­வுகளை அகற்­ற­வேண்டி இருக்­கி­றார்கள் இவர்கள்.

‘சமை­ய­லுக்கு பொருத்­த­மான இட­மாக இது இல்லை என்­றாலும் நான் இங்கு சமைக்­கிறேன்’ எனக் கூறு­கிறார் ஷெங்கின் மனைவி வேங். 1999ஆம் ஆண்டு விஞ்­ஞான தொழில்­நுட்பக் கல்­லூ­ரியில் படி ப்­ப­தற்­கான வாய்ப்­பினை பெற்­ற­ போ­திலும் ஏழ்­மையின் கார­ண­மாக படிக்­க­மு­டி­ய­வில்லை. தொடர்ந்து 50 யுவா­னுடன் (சுமார் 1000 ரூபா) ஷெங்யாங் நக­ருக்கு வந்­துள்ளார்.

தற்­போது இவர் தங்­கி­யுள்ள ஹோட்டல் வழங்­கி­யுள்ள இடத் தில் பாதணி சுத்­தப்­ப­டுத்தி மாதத்­துக்கு 2000 யுவான்­களை வரு­மா­ன­மாக ஈட்­டு­கிறார். அத்­துடன் பாதணி திருத்­து­வ­திலும் ஈடு­ப­டு­கிறார். இதில் அவ­ரது குடும்­பத்­தையும் வய­தான பெற்­றோ­ரையும் கவ­னிக்­கிறார்.

ஷெங்கின் வதி­விடம் இன்னும் ஜிலின் மாகா­ணத்தில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளதால் குறைந்த வாடகை வீட்டை ஷெங்­யாங்கில் பெறு­வ­திலும் ஷெங் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார்.

தன்னிடம் தற்போது உள்ளவற் றால் நான் திருப்திகொள்கிறேன். நாங்கள் இளமையானவர்கள். தொடர்ச்சியாக உழைத்து வாழ்க் கையில் முன்னேற்றமடைவோம் எனக் கூறுகிறார் ஷெங்.

1843article-240

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக அழகிப்போட்டி நடத்த இந்தோனேசிய முஸ்லிம் மதத்தலைவர்கள் எதிர்ப்பு..!!
Next post த.தே.கூ வேட்பாளர் தம்பிராஜா உண்ணாவிரதம்..!!