மின் சூரியனால் சுட்டுப் பொசுக்கும் லண்டனின் டி ‘வாக்கி டாக்கி’ கட்டிடம்..!!
Read Time:1 Minute, 5 Second
லண்டன்: லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 மாடி அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று மக்களின் பெரும் துயரமாக மாறியுள்ளது. காரணம், இந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜன்னல் கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தை படு பிரகாசமாக பிரதிபலித்து மக்களுக்கு பெரும் இடையூறு செய்வதால் என்று கூறுகிறார்கள்.
ஆளாளுக்கு ஒரு பிரச்சினை என்பது போல், நம்மூரில் உயரமான பிளாட்களைக் கட்டி வீட்டிற்குள் சூரிய ஒளி பரவ விட மாட்டேன் என்கிறார்கள் என்றால், லண்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தால் அதிக சூரிய ஒளி தாக்குகிறது எனப் புலம்புகிறார்கள் மக்கள்.
இதையடுத்து எங்கு தவறு நடந்தது என்று கட்டுமான குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்
Average Rating