கோழி முட்டை அளவிலான வெள்ளை வைரம்..!!
118 கரட் கோழி முட்டை அளவுடைய வைரம் ஒன்று அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள சொதபிஸ் நிறுவனத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்
புகழ்வாய்ந்த சொதிபிஸ் ஏலவிற்பனை நிறுவனம் இந்த வெள்ளை வைரத்தினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி விற்பனை செய்யவுள்ளது. இது ‘வெள்ளை வைர’ விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
நீள்முட்டை வடிவில் வெட்டப்பட்டுள்ள இந்த வைரக் கல்லானது ஏறத்தாள முட்டையின் அளவுடையது எனக் கூறப்பட்டுள்ளது.
இவ் வைரமானது 35 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4656 மில்லியன் ரூபா ) விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சொதிபிஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை வைர விற்பனையில் ஆகக் கூடுதலாக 101 கரட் வைரமொன்று 27 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையானதே தற்போதைய சாதனையாக உள்ளது. இதனை ஹரி வின்ஸ்டன் என்பவர் கொள்வனவு செய்தார்.
உலகின் 4ஆவது பழைமையான சொதிபிஸ் ஏலவிற்பனை நிறுவனமானது, ஆசியாவில் கால்பதித்து 40 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் ஒரு அங்கமாக 7.59 கரட் நீல வைரம் ஏலத்துடன் சேர்த்து இந்த வெள்ளை வைர ஏலமும் நடைபெறவுள்ளது.
Average Rating