சங்கரியை விரட்ட சிறிதரன் நடவடிக்கை! விக்கியை வீழ்த்த சுரேஷடன் மாவை கூட்டு! (வாசகர் ஆக்கம்)

Read Time:4 Minute, 15 Second

TNA (1)தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக மார்தட்டிக் கொண்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் பகிரங்கமாக அடிதடிச் சண்டை நடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது இவ்வாறு காலை வாரும் நடவடிக்கையால் தான் தான் தோற்றுப் போனதாக கடந்த தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சி.வி.கே சிவஞானம் பின்னர் புலம்பியதை அனைவரும் அறிந்தது. இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் இந்த காலை வாரும் முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சற்றுத் தீவிரமடைந்திருப்பதைக் காணமுடிகிறது.

முதலமைச்சர் பதவிக்குக் கண் வைத்திருந்த மாவை சேனாதிராசா, அது கிடைக்காமல் போனதற்காக சம்பந்தன் மீதும், சுமந்திரன் மீதும் மிகவும் கோபத்துடன் இருப்பது ஒரு பக்கம் இருக்க, முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனின் காலை வாரும் முயற்சிகளில் திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தையும் அவதானிக்க முடிகிறது.

விக்னேஸ்வரன் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, கூட்டமைப்பு வேட்பாளர் களில் அவரை விட வேறு சிலர் கூடுதலான வாக்குகளைப் பெற வைத்து, விக்கினேஸ்வரனை தலைகுனிய வைப்பதிலும் அதன் மூலம் அவர் முதலமைச்சராவதைத் தடுப்பதிலும் மாவை – சுரேஸ் குழுவினர் தீவிரமாக இருப்பதாக அறிய முடிகிறது.

இது ஒருபுறமிருக்க, கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு சிறிதரன், இந்த மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டி யிடும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரியை எப்படியும் தோற்கடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் வேலை செய்து வருகின்றார், அவரது முனைப்புக்கு விருப்பு வாக்குகள் காரணம் அல்ல. வேறு சில காரணங்கள் இருக்கின்றன.

ஆனந்தசங்கரியை கூட்டமைப்பு சார்பில் இந்த மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது அரசியல் எதிர்காலம் சூனியமாகி, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிர்காலத்தில் மண் விழுந்து விடும் என்ற அச்சம் சிறிதரனுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரி மலையாகவும், சிறிதரன் மடுவாகவும் இருக்கும் நிலையில், ஆனந்தசங்கரி வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், அரசியல் ரீதியாகவும், பதவி ரீதியாகவும் தனக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என சிறிதரன் அஞ்சுகிறார்.

சியதரனின் கவலை எல்லாம் ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் மீண்டும் காலூன்றினால், தனது வியாபாரத்தை மூடிக்கட்ட வேண்டி வருமே என்பதுதான்…

ஆனந்தசங்கரியின் கவலை எல்லாம் வயதும் போய்க் கொண்டே இருப்பதால் இருக்கின்ற கொஞ்சக் காலத்துக்குள் மீண்டும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு மாகாணசபை உறுப்பினராகவோ (வாய்ப்பிருந்தால் மாகாண மந்திரியாகவோ) வந்துவிட வேண்டும் என்பது தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post ஆட்டோ குடைசாய்ந்து விபத்து: குழந்தை மரணம்