ராஜீவ் கொலை; காங்கிரஸ் பெண் பிரமுகரிடம் விசாரிக்கவில்லையென மனு

Read Time:3 Minute, 22 Second

rajiv.murdersஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்திரசாமி, அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பெண் பிரமுகர் குறித்து சி.பி.ஐ. (பன்னோக்கு விசாரணை பிரிவு) விசாரிக்கவில்லை.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள முதலாவது தடா நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தடா நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, மனு குறித்து ஒக்டோபர் 10ஆம் திகதிக்குள் சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 26பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு (தடா) நீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ, பல உண்மைகளை விசாரிக்காமல் மறைத்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்திரசாமி மற்றும் அரசியல் தலைவர்களின் தொடர்பு குறித்தும், மனித வெடிகுண்டாக செயற்பட்ட தனு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த காங்கிரஸ் பெண் பிரமுகர் குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்கவில்லை.

எனவே இந்த குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணையை இந்த தடா நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணியினால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனு குறித்து ஒக்டோபர் 10ஆம் திகதிக்குள் சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் யாழ். மாணவன் மீட்பு!!
Next post இந்திய மீனவர்கள் காரைநகரில் கைது