வடமாகாண சபை தேர்தலும்.. வெளியே தெரியாத வண்டவாளங்களும்!!

Read Time:33 Minute, 45 Second

tnasritharan-2வடமாகாண சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து… தமிழர்தரப்பு அரசியல்வாதிகளும், அரசதரப்பு அரசியல்வாதிகளும் மாறிமாறி ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்தி, இனவாதத்தை கக்கி அறிக்கை  போர் நடத்தி கிட்டதட்ட ஓர் முடிவுக்கு வந்து விட்டார்கள். பெரியதாக அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்பது சந்தோசமான விடயம். இந்த போரில் யார் வெல்வார்கள் என்பதையும் போரில் போட்டியிட்ட அரசே அறிவித்து விட்டது.

கூட்டமைப்பினர்தான் வடமாகான சபை தேர்தலில் வெல்வார்கள் என்பதை ஜனாதிபதியே தன் வாயாலேயே அறிவித்து விட்டார். ஆனால்.. இந்த மூன்றாம் கட்டப் போரில் வெற்றி வாகை சூடப்போகும் தரப்பினர்களாகிய கூட்டமைபினர்களுக்கு தான் இன்னும் அந்த நம்பிக்கை வரவில்லை். 21ஆம்  திகதிக்குள் அரசாங்கம் எதையாவது செய்து விடுவார்களோ என்கின்ற அச்சம் அவர்களுக்கு இன்னும்  இருந்து கொண்டேயிருக்கின்றது. 21 ஆம் திகதி அன்று அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருந்தால் சரி..

  தேர்தல் என்று வந்துவிட்டால் யார் யாரை தேர்தலில் வெல்ல வைப்பதென்பது…, முக்கியமாக ஊடகங்களின் கையில் தான் உள்ளது.  ந்த வகையில்… தமிழ்  ஊடகங்கள் (கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களும், புலம்பெயர் தேசத்திலிருந்து  இயங்கும் ஊடகங்களும்) அரசாங்கத்தின் மீதும்,  இராணுவத்தினரின் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி, எப்படியாவது கூட்டமைப்பினரை ஆட்சியில் ஏற்றவேண்டுமென பகீரதபிரயத்தனம் செய்தார்கள், இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றவர்களும் தங்கள் பங்குக்கு இணையங்களிலும், பேஸ்புக்கிலும் கூட்டமைப்புக்கு ஆதரவளித்து விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள்  தங்களுக்கு  விளம்பரம் தேடிக் கொள்கிறார்களா? அல்லது கூட்டமைப்பினர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறார்களா? என்பதுதான் புரியவில்லை. ஆனால்.. தாங்களும் தமிழ் தேசியவாதிகள் தான் என்பதை  பறைசாற்றிக்கொள்ள இதன் மூலம் முனைகின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது.

நாட்டில் வாக்களிக்க போகும் மக்களோ தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும், உறுதியாக இருக்கின்றார்கள். புலம்பெயர் தமிழர்களின் கதையை கேட்டுதான் அங்குள்ள மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்கின்ற ரீதியில் பல புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் (வானொலிகளில்) வரிந்து கட்டிக்கொண்டு… ‘புலம்பெயர் தமிழா்களே அங்குள்ளவர்களை   கூட்டமைப்புக்கு வாக்களிக்க சொல்லுங்கள்’ என பிரச்சாரம் செய்ததை கேட்கக் கூடியதாக இருந்தது. நாட்டில இருப்பவர்கள் ஏதோ தங்களைவிட அறிவற்றவர்கள் என்று எண்ணுகிறார்களோ என்னவோ…

இந்த வடமாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பினர்களின் தேர்தல் வியூகம் எப்படி அமைந்தது? குறிப்பாக சொல்லப் போனால்…. போர் முடிந்து மூன்றாண்டுகளாக உறுதியாக உள்ள வாக்காளர்களின் மனோநிலையை குழப்புவதில் தான் கூட்டமைப்பினர்களின் தேர்தல் பிரச்சாரங்களும், அறிக்கைகளும் செய்யப்பட்டதே ஒழிய தமிழர்களிற்கிடையேயான ஒற்றுமையை  பேணி, அவர்களின்  ஒட்டுமொத்த வாக்குகளை அறுவடை செய்கின்ற எந்தவொரு வேலைப்பாடுகளும் நடைபெற்றதாக தெரியவில்லை.

பழைய.. 56ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி பாடிய பல்விகளை திரும்ப.. திரும்ப பாடியதும், வீரவசனங்களை பேசியதும், அரசாங்கத்தை குற்றம் சுமத்தியதுமான பிரச்சார நடவடிக்கைகளை  தவிர வேறெதையும் புதிதாக செய்யவில்லை. 60ஆண்டு காலமாக செய்த அதே பிரச்சார பாணியை தான் இன்றும் கடைப்பிடித்தார்கள். புதியவர்களை புகுத்தினால் தானே புதிய சிந்தனை தோன்றும்.

உதாரணமான… ஐ.தே.கட்சியுடன் ஓட்டி உறவாடும் கூட்டமைப்பு.. ஐ.தே.கட்சியினரை வடமாகாண சபை தேர்தலிலிருந்து விலகியிருக்குமாறு கூறி, அவாகளின் வாக்குகளையும் தங்கள் பக்கம் வசப்படுத்தியிருக்கலாம்.

ஐ.தே.கட்சிக்கு ஒரு  குறிப்பிட்ட சதவீத  வாக்குகள் வடமாகாணத்தில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடதக்கதாகும். அதேபோன்று தமிழாகளின் சார்பாகவுள்ள வலதுசாரிக் கட்சிகளின் ஆதரவைக் கூட  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுப் பெற்றிருக்கலாம்.

முக்கியமாக ஐ.தே.கட்சி முதன்மை வேட்பாளரான துவாரகேஸ்வரன் என்பவர் கூட்டமைப்பு கட்சியினரை விமர்சித்து தான் யாழ். மாவட்டத்தில பிரச்சாரம் செய்தார் என்பது இங்கு முக்கியமானது. ஆகவே… அரசாங்கம் மட்டுமே கூட்டமைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்யவில்லை, ஐ.தே. கட்சியினரும் கூட்டமைப்புக்கு எதிராகவே பிரச்சாரம் செய்தவர்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பேரினவாதிகள் என்று நீங்கள் பேசுகின்ற போது ஐ.தே.கட்சியினரும் அதற்குள் உள்ளடங்குவார்கள்.

நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் (பாராளுமன்ற, ஜனாதிபதி, உள்ளூர்ஆட்சி தோ்தல்) மக்கள் யாருக்கு பெரும்பான்மையான வாக்குகளை (கூட்டமைப்பு) அளித்தார்களோ, அவர்களுக்கு தான் இந்த முறையும் தங்கள் வாக்குகளை அளிக்கப் போகின்றார்கள்.

அதிலும்…, வடமாகாண சபைத் தேர்தல் என்பது தனியே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணம் என்கின்றபடியால் 95 வீதமான தமிழர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள் என்பது  தெளிவாக தெரிகின்றது. இது அரசாங்கத்துக்கும் ஏனைய  எதிர்கட்சிகளுக்கும் கூட தெரிந்த விடயம் தான். ஆனால்…, அரசாங்கம் கட்டாயமா இந்தத தேர்தலில் நிற்கவேண்டிய நிர்ப்பந்தம்   உள்ளதால் இத்தேர்தலில் நிற்கின்றது.

அரசாங்கம் இத்தேர்தலில் போட்டியிட்டது..  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சாதகமான விடயமாகும். அரசுக்கெதிரான பிரச்சாரங்களை செய்து பெரும்பாண்மையான வாக்குகளை தமிழ் மக்களிடமிருந்து பெறுவதற்குரிய சாத்தியம் உருவாக்கியுள்ளது. வேறு யாரை தான் கூட்டமைப்பு திட்டித் தீர்ப்பது?

இதில் முக்கிய விடயம் என்னவென்றால், நடந்து முடிந்த உள்ளூர்ஆட்சி தேர்தலில்… அரசாங்கம் மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தை போன்று இத்தேர்தலில் மேற்கொள்ளவில்லை என்பதோடு… ஏனோதானோ என்ற ரீதியிலேயே அரசாங்கம் இந்தேர்தலில் பிச்சாரத்தை மேற்கொண்டது. ஈ,பி.டி.பி கட்சியினரும் பெரிதாக இந்த தேர்தலில் பிரச்சாரத்தில ஈடுபடவில்லை என்பதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. காரணம்.. தங்கள் தேர்தல் சின்னமான வீணைச் சின்னத்தில் அவாகளை போட்டியிட அரசாங்கம் அனமதிக்காததால் அவர்களும்கூட இத்தேர்தலில் வேண்டாவெறுப்பாக செயல்பட்டதாகவே தோன்றுகின்றது.

இத்தோ்தலில் முக்கியமாக நாம் கவனத்தில் கொண்டவை.. .. தமிழ்தேசியக் கூட்டமைப்பு தான் இத்தோ்தலில் வெற்றிபெற வேண்டுமென பெரும்பாலான வடக்கு வாழ் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் மிகவும் அக்கறை கொண்டவாகளாக இருந்த போதும்… தமிழ் தேசிய கூட்டமைபில் அங்கம் வகிக்கும் கட்சியினர்கள் தமக்குள் ‘ஏட்டிக்கு போட்டியாகவும், விரோத மனப்பான்மையுடன்’ நடந்து கொண்டமையும் மிகவும் வருந்ததக்க செயலாகும்.

“தமிழர்களே! வீட்டுக்கே வாக்களியுங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்!”  என்று பொதுவான கோசங்களை சொல்லி பிரச்சாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சியினர்கள் மேற்கொண்டாலும், தங்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களை வெல்ல வைக்க வேண்டும் என்பதில் அவர்களிற்கிடையே நடைபெற்ற ‘உள்குத்துவெட்டு விளையாட்டுகளும், குழிபறிப்பு  வேலைகளும்’ நிறையவே  நடந்தேறியுள்ளன. இந்தமாதிரியான செயல்களால் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க தயாராக இருந்தவர்களும் வாக்களிக்காமல் பின்வாங்கியுள்ளார்கள் என்பது களநிலவரம்.

வவுனியாவிலும், யாழ்பாணத்திலும் “புளொட் அமைப்புக்கும், ஆனந்தசங்கரிக்கு, மற்றையகட்சியினருக்கும் எதிராக” கூட்டமைப்பு கட்சி ஆதரவாளர்களாலேயே துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் “சிறிதரன் எம்.பி, துவாரகேஸ்வரன்” போன்றோர் இருப்பதாக அறியக் கிடைக்கின்றது.

சிறிதரனும், துவாரகேஸ்வரனும் 
 
இந்த தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிதரன் எம்.பி யினதும், தமிழர்களின் வாக்குகளை அபகரித்து அதன்மூலம் தாங்கள் ஒரு உறுப்பினர் பதவியையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தில் போட்டியிட்ட ஐ.தே.கட்சியை சேர்ந்த முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் போன்றோரை பற்றி நிறையவே விமர்சனங்கள் உண்டு.

அவர்களின் தனிப்பட்ட வாழ்கையில்.., அவர்கள் நடந்து கொண்ட முறையிலும், அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது, அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள  உற்று நோக்குகின்ற போது தமிழர்கள் கட்டாயம் முகம்சுழிக்க வேண்டிய நிலைமை தான் உள்ளது. தமிழ்தேசியத்தையும், தமிழர்களின் வாக்குகளையும் தங்கள் சொந்தப் பிழைப்புகாக பயன்படுத்த முற்படுபவர்களாகவே இவர்கள் இருவரினதும் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

முதலில்… சிறீதரன் எம்.பியை எடுத்துக் கொள்வோம்

 
சிறிதரன் எம்.பி எப்போதுமே சர்ச்சைக்குரியவராகவும், பல்வேறுபட்ட விமர்சனங்களை தாங்கி நிற்பவராகவே இருந்து கொண்டிருக்கின்றார். கூட்டமைப்புக்குள் இருப்பவர்களிடையே கூடுதலான விமர்சனம் இவர்மேல் தான் உள்ளது.

காரணம் என்ன? இவரின் நடத்தையும், இவரின் சார்புநிலையும் தான் இவருக்கெதிராக மேற்கொள்ளப்படும் விமர்சனங்களாகும்…

இவரின் தம்பியான சிறிகுகன் என்பவரால் வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் லங்காசிறி, தமிழ்வின், ஜேவிபி, மனிதன் ஆகிய இணையத்தளங்களில், கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் (தான் அங்கம்  வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த) மற்றைய கட்சியினர்களுக்கு எதிராக பல்வேறுபட்ட பொய்யான தகவல்களையும், குறைகளையும் கூறி பரப்புரை செய்வதன் மூலம்….., தானும், தமிழரசுக் கட்சியினரும் மட்டுமே தமிழ் தேசியவாதிகள் என்பதை காட்ட முனைகின்றார். அது மட்டுமல்லாது புலிகளின் ஏகபிரதிநிதியாக தன்னை மட்டுமே புலம்பெயர் தமிழர்களிடம் காட்ட முற்படுகின்றார்.

ltte.Theepanபுலிகள் இருந்த காலத்தில் சிறீதரன் எம்.பி புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர். ஆனால்… தற்போது தான் புலிகள் சார்பாக செயற்படுவதாக காட்டி… வெளிநாடுகளுக்குச் சென்று புலிகளின் பெயரைப் பாவித்து பலகோடி ரூபாய்களை வெளிநாடு வாழ் தமிழ்மக்களிடம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் முன்னர் தனது மனைவியைக் கொடுமைப்படுத்தியதுடன், வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்ததன் காரணத்தினால் இவரின் மனைவியின் சகோதரரான விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியாக இருந்து இறுதி யுத்தத்தில் மரணமடைந்த  தீபன் அவர்களினால், இவர் விடுதலைப் புலிகளின் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கட்டிவைத்து அடிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடதக்கது. (சிறிதரனை பற்றி இன்னும் நிறையவே வண்டவாளங்கள் உள்ளன. இந்த நேரத்தில் அவைகள் வேண்டாம்..)

உண்மையில் சிறிதரன் தமிழ்தேசியவாதியா அல்லது சிங்களதேசியவாதியா? இதை படித்துப் பாருங்கோ…

சிறிலங்கா புலனாய்வு சிங்களத்தி “செவேந்தி”யின் கீழ் லங்காசிறி, தமிழ்வின், ஜேவிபி, மனிதன், இணையத்தளங்கள் இயங்குகின்றன. அந்த சிங்களத்தியுடன் கைகோர்த்துக் கொண்டே சிறிதரன் எம்.பியின் தம்பி சிறிகுகன் செயற்படுகிறார். இது தமிழ்மக்களை ஏமாற்றும் வேலையாகும். இதற்குரிய ஆதாரங்கள் அனைத்தும் ஆவணங்களுடன் இணைத்துள்ளோம்.

சிறிதரன் எம்.பி தமிழ் தேசியம் பேசித் திரிகிறார். ஆனால் அவரின் தம்பி சிறிகுகன் சிறிலங்கா புலனாய்வு பிரிவைச் சேர்ந்த செவேந்தி என்ற சிங்களப் பெண்ணுடன் கைகோர்த்து செயற்பட்டு வருகிறார். இது தமிழ் வர்த்தகர்களிடமும் அப்பாவி தமிழ் மக்களிடமும் கறக்கும் பணத்தின் ஒருபகுதி சிங்கள பேரினவாதிகளின் கைகளுக்கு செல்கிறது.

லங்காசிறி, தமிழ்வின், ஜேவிபி, மனிதன் ஆகிய இணையத்தளங்கள் சுவிஸில் சிறிகுகனின் பெயரில் Lankasri Gmbh என்றும், லண்டனில் செவேந்தி என்ற சிங்களத்தியின் பெயரில் Lankasri Ltd என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிங்களப்பெண் மிகமோசமான இனவாதியாகும். இவரின் “பேஸ்புக்கை” இங்கே இணைத்துள்ளோம். அதில் அவரின் நண்பர்கள் 78பேரும் சிங்களவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினர். இவரின் பேஸ்புக்கில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேஸ்புக்கே இணைக்கப்பட்டுள்ளது..

இந்த சிங்களத்தியின் பெயரிலேயே லங்காசிறி, தமிழ்வின் நூறு வீதபங்கும் இருக்கிறது. இவர்தான் லண்டனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் லங்காசிறி லிமிட்டெட்டின் முழு உரிமையாளரும் இவர்தான். இந்த சிங்களப் பெண்ணை சிறிகுகனின் நண்பரான சஞ்சே என்பவர் திருமணம் முடித்திருக்கிறார். இதன் ஊடாகவே சிங்கள புலனாய்வாளர்கள் லங்காசிறி, தமிழ்வின் ஆகியவற்றின் முழு உரிமையையும் எடுத்திருக்கிறார்கள்.

சிங்கள புலனாய்வாளர்களுடன் சிறிகுகன் இணைந்து கொண்டு தமிழ் ஊடகவியலாளர்களை சமூகத்திலிருந்து அழிக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளார். இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களை அழித்து வந்த சிறிலங்கா பேரினவாதிகள் அவர்களிடமிருந்து தப்பி வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்களை ஓரங்கட்டுவதற்கு சிறிகுகன் மற்றும் சிங்களத்தி சிவேந்தி ஆகியோர் கூட்டுசதிகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்னொரு தகவலும் எமக்கு கிடைத்திருக்கிறது. சிறிகுகனின் சிங்கள சகாவாக இருக்கும் லங்காசிறியின் லண்டன் உரிமையாளர் சிவெந்தி என்ற சிங்களத்தியின் நெருங்கிய உறவினராக இருப்பவர் முள்ளிவாய்க்காலில் பல படுகொலைகளை செய்த போர்க்குற்றவாளிகளில் ஒருவரான ஜாலிய செனிவரத்னாவாகும். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்த கப்டன் செனிவரத்னா என்பவன் செவேந்தி என்ற பெண்ணின் நெருங்கிய உறவினராவார்.

கப்டன் செனிவரத்னா என்பவன் அண்மையில் லண்டனுக்கு வந்து லங்காசிறி, தமிழ்வின் உரிமையாளர் செவேந்தி என்ற தனது உறவினருடனேயே தங்கியிருந்தான்.

இங்கே லங்காசிறி லண்டனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவு விபரங்கள், மற்றும் லங்காசிறி, தமிழ்வின் இணையத்தளங்களின் உரிமையாளர் சிவேந்தி என்ற சிங்களத்தியின் பேஸ்புக் ஆகியவற்றை இணைத்துள்ளோம்.

இதை பார்த்து சிறிதரன் எம்பி யார், சுவிஸில் இருக்கும் அவரின் தம்பி சிறிகுகன் யார், லண்டனில் இருக்கும் சிவேந்தி என்ற சிங்களத்தி யார் என்பதை புரிந்து கொள்வீர்கள்….

http://www.thinakkathir.com/wp-content/uploads/2011/12/50217179.pdf

http://www.facebook.com/people/Nadeesha-Sewwandi/1840304901

முக்கியமாக… இந்த வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு கட்சியை வெல்ல வைப்பதற்காக சிறிதரன் செயல்பட்டதை விட, கிளிநொச்சியில் ஆனந்தசங்கரியை வீழ்த்துவதற்காகவே இத்தேர்தலில் ஆனந்தசங்கரிக்கு எதிராக பல “குழிபறிப்பு” வேலைகளிலும், பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக பரவலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை ஆனந்தசங்கரியாரும் பலமுறை  புலம்யெர் ஊடகங்களில் அளித்த பேட்டியின் போது கூறி விசனப்பட்டுள்ளார்.

சிறிதரன் எம்.பியை பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சி சார்பாகவே அவரின் செயல்பாடு உள்ளதே தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்ததாக அவரின் “எந்தவோரு செயல்பாடும்” நடைபெற்றதாக தென்படவில்லை. கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு இப்படியொருவர் செயல்படுவது கூட்டபைப்பு தலைவர் சம்பந்தனாருக்கு தெரியாதா? அல்லது கூட்டமைப்புக்குள் இருப்பவாகள் எந்தவித கட்டுப்பாடுமின்றி தன்னிச்சையாக செயல்படுகிறார்களா? ஆகக்குறைந்தது தமிழரசு கட்சியின் தலைமையாவது சிறிதரனின் இந்த விசமத்தனமான செயல்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்களா?

தமிழரசுக் கட்சியில் உறுப்பினாகளாக இருப்பவர்களில்.., வெளிநாட்டுக்கு அதிகம் பயணம் செய்தவராக (மகிந்தவைவிட கூடுதலான வெளிநாட்டு பயணம்) சிறிதரன் எம்.பியே காணப்படுகின்றார். தனிப்பட்ட  வேலையாக வெளிநாடு வரும்போதும் சரி, தான்  சார்ந்த  தமிழரசுகட்சி சார்பாக வெளிநாடு வரும்போதும் சரி, தாங்கள் ‘தமிழ்தேசிய  கூட்டமைப்பு’ சார்பாகவே வெளிநாடு வந்ததாக கூறி புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடமிருந்தும் பணத்தை சேர்த்துக் கொண்டு, அப்பணத்தை தனக்கு சார்ந்தவர்களுக்கும், தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றார் என்கின்ற ஆதங்கம் கூட்டமைப்பு கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு உண்டு.

‘தமிழ் தேசியம்’ என்ற பெயரில் ஒழிந்திருக்கும் இப்போலிகளை இனம்கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலக்கிக் கொள்ளாவிட்டால், இனிவரும் காலங்களில தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து போவதற்குரிய நிலைமை தோன்றும் என்பதை தமிரசுக்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக…. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக முதன்மை வேட்பாளராக போட்டியிடும் துவாரகேஸ்வரன் பற்றியதாகும்..

 துவாரகேஸ்வரன் (படத்தின் நடுப்பகுதியில் காணப்படுபவர்)
முதலில்.. துவாரகேஸ்வரன் ஏன் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பார்ப்போம்… இவரின் குடும்பமானது முக்கியமாக அரசியலைவிட., பிசினஸ் செய்வதிலேயே முக்கிய அக்கறையுள்ள ஒரு குடும்பமாகும். அந்தவகையில்… காலம்சென்ற தியாகராஜா மகேஸ்வரனும் சரி, அவரின் தம்பி துவாரகேஸ்வரபும் சரி, தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ளவோ அல்லது தமிழர்களின் நலன்சார்ந்தோ நடைபெறுகின்ற தேர்தல்களில் போட்டியிடவில்லை.

மாறாக.., இத்தேர்தலில் ஒரு சீற்றையாவது பெற்றுக் கொண்டு, அதன்மூலம் தங்களின் வியாபார தேவைகளுக்கான அனுமதி பத்திரங்களை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன்மூலம் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொளளலாம் என்பதே இவர்களின் குறிக்கோளாகும்.

அதாவது… தங்களின் வியாபாரத்தை தென்னிலங்கையிலிருந்து… தமிழர் பகுதிக்கு விஸ்தரித்துக் கொண்டு, அதில் சிறிய தொகையை வடபகுதியில் உள்ள கோயில்களுக்கு வழங்குவது, திருவிழா செய்வது, அன்னதானம் கொடுப்பது, தண்ணீா மடங்களில் தண்ணீர் வழங்குவது போன்ற சிறிய,சிறிய விடயங்களை செய்து…. தமிழ்மக்கள் கொஞ்சப்பேரை கவர முயற்சிக்கின்றார்கள். இவர்களை போன்ற முதலாளிகள் தான் மகிந்த அரசுக்கு நிதிவழங்கி, அவர்களின் தேர்தல் செலவுகளையும் ஈடு  செய்கின்றவர்களாக உள்ளார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரிய,பெரிய பிசினஸ்  செய்ய வேண்டுமென்றால் அரசுடன் ஓத்துழைக்காமல் எதுவுமே நடைபெறாது என்பது குழந்தைபிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

வெளிப்பார்வைக்கு.. அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் போல் இவர்கள் மேடையில் பேசிக் கொள்வார்கள், ஆனால்.., உண்மையில் அரசாங்கத்தின் பிசினஸ் பங்குதாராகள் ‘துவாரகேஸ்வரன்’ போன்றவர்கள் தான் என்பதை தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்..  இவர்கள் தரும் அற்பசலுகைகளுக்காக வீணாக உங்கள் வாக்குகளை இவர்களுக்கு போட்டு வீணடிக்காதீர்கள்.

‘துவாரகேஸ்வரன்’ போன்றவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக… மற்றொரு சிங்கள பேரினவாத கட்சியான ஐ.தே.கட்சியை தமிழர் பகுதியில் காலூன்ற வழிசமைக்கும் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவது நல்லது.

துவாரகேஸ்வரன் என்பவர் பிரான்ஸில் இயங்கும் புலம்பெயர் வானொலி சேவை (ரி.ஆர்.ரி ) ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் கூறியதாவது…

தான் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர் இல்லையாம்  என்கிறார், ஆனால் தமிழ்மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கூடாது என்று கூறினார். அவர் அளித்த அந்த செவ்வியில்.. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மாவையார், சித்தார்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து, அவர்களின் மேல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதில் அவர் ஒரு வார்த்தை கூட அரசுக்கு எதிராக பேசவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.

இதிலிருந்து நாம் ஒருவிடயத்தை நன்றாக விளங்கிக் கொள்ளலாம். அதாவது…. துவாரகேஸ்வரன் கூட்டமைப்பை எதிர்த்து தேர்தலில் நிற்பதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு  கிடைக்க வேண்டிய வாக்குகளை பிரிக்க முனைகின்றார், தான் சார்ந்த ஐ.தே.கட்சிக்கும் வாக்கு சேர்க்கின்றார், அதேநேரம் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரை மட்டுமே குறிவைத்து விமர்சிப்பதென்பது.., கூட்டமைப்புக்குள்ளிருந்து கொண்டு கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கே குழிபறிக்கும் நபர்களுடன் (சிறிதரன்) கூட்டுச் சேர்ந்துள்ளார் என்பதையே குறிக்கின்றது.

 பொதுவாக.. பிரபல வர்த்தகராக இருந்த தியாகராஜா மகேஸ்வரன் மிகவும் நல்ல குணங்களைக் கொண்ட மனிதராக இருந்தவர்.  பெரும்பான்மை சிங்கள அரசியல் கட்சியில் இருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை தொடர்ந்து எதிர்த்து வந்தவர். பண்புமிக்க அவர் இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் வகித்தவர்.

ஆனால், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராக வட மாகாணசபைத்  தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அவரது சகோதரராகிய அப்படிப்பட்டவர் அல்ல.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளிடமே பல லட்சங்களைப் பெற்று மோசடி செய்து ஏமாற்றிய கில்லாடியே துவாரகேஸ்வரன். இதன் காரணத்தினால் புலிகளால் பலமுறை எச்சரிக்கையும் செய்யப்பட்டவர்.

 
மகேஸ்வரனின்  மறைவிற்குப் பின் மகேஸ்வரின்  துணைவியார் அதாவது “அண்ணியார் தாய்க்கு சமனானவர்” என்பதையும் மறந்து அண்ணியாருடன் தகாத தொடர்பினை ஏற்படுத்த துவாரகேஸ்வரன் முயற்சித்தவர். இதன் காரணமாக  மகேஸ்வரனின் துணைவியார்  துவாரகேஸ்வரனை அடக்குவதற்கு இராணுவ அதிகாரி ஒருவரின் உதவியையும் நாடியிருந்தார்.

 இந்நிலையில் துவாரகேஸ்வரன் 29.12.2012 அன்று நல்லூரில் வைத்து இராணுவ அதிகாரியான ஜெயக்கொடி என்பவரின் அசிட்வீச்சு தாக்குதலுக்கும் இலக்காகியிருந்தார் என்பதை யாபேரும் அறிந்ததே.

தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான செயற்பாடுகளில் மறைமுகமாக ஈடுபட்டு வரும் துவாரகேஸ்வரன் கோத்தபாயவுடனும் பசில் ராஜபக்சவுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றார். அதேபோல் தனக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பகிரங்கமாக கூறியும் வருகிறார்.

இதன் பின்னணியில் இருப்பது ஒருவிடயம் தான். அதுதான் பிசினஸ்…

அன்பான தமிழர்களே! 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடமாகான சபை தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போகின்றீாகள்? துவாரகேஸ்வரன் போன்ற வியாபாரிகளுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து.., வியாபாரிகளின் வியாபாரத்தை மேலும் விஸ்தரிக்க போகின்றீர்களா? அல்லது கூட்டமைப்புக்கு   வாக்களித்து உங்கள் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகின்றீர்களா???
நன்றி-
–இலக்கியசெல்வன்–

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய மீனவர்கள் காரைநகரில் கைது
Next post பொருளாதார வீழ்ச்சியால் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் ‘ஆவிகளின் நகரம்’