லண்டன் M25 மோட்டர் வே, தமிழர்களை பிடிக்க சுற்றிவளைப்பு!

Read Time:2 Minute, 28 Second

arrest1லண்டனில் உள்ள M25 நெடுஞ்சாலை (குரொய்டன் நோக்கிச் செல்லும் பாதை) சுற்றிவளைக்கப்பட்டு 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். செல்த்தம் அன் குளொஸ்டர் எனப்படும் வங்கியை குறிவைத்து இந்த நான்கு நபர்களும் செயல்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட இந்த வங்கி வழங்கிவரும் கடன்அட்டை மற்றும் வங்கி அட்டைகளை இவர்கள் குறிவைத்து, அதன் இரகசியக் குறியீடுகளை எடுத்துள்ளார்கள்.

பல மில்லியன் பணம் இதனூடாக மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

இவர்கள் நால்வரும் ஒன்றாகப் பயணிக்கும் போது இவர்களை கைது செய்யவென பொலிசார் திட்டம் தீட்டியுள்ளார்கள். இதேவேளை கடந்த திங்களன்று இவர்கள் ஒன்றாக காரில் M25 நெடுஞ்சாலையில் பயணித்துள்ளார்கள்.

இவர்களை இரகசியமாக பின்தொடர்ந்த பொலிசார், அறிவித்தலை அடுத்து மேலதிக பொலிசார் வரவளைக்கப்பட்டு M25 நெடுஞ்சாலையில் இவர்களை சுற்றிவளைத்த பொலிசார் பின்னர் இவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளார்கள்.

இவர்கள் பயணித்த காரில் இருந்து மடிக் கணணி, மற்றும் போலி கடன் அட்டைகள், இரகசிய குறியீடுகளை தூரத்தில் இருந்தே அறியும் அதி நவீன கருவிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஷீர் முஸ்தபா(21), அஷோக் பாலசுப்பிரமணியம்(22), தன்வேல் வில்வநாதன்(50), குசலகுமார் சிதம்பரப்பிள்ளை(48) என்னும் நால்வருமே மேற்படி கைதாகியுள்ளார்கள்.

கடந்த ஆகஸ்ட்15 பொலிசார் கைது செய்த நபர் ஒருவர் கொடுத்த தகவலின் பெயரில் தான் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சு பதவிகள் தொடர்பில் இந்த தீர்மானமும் இன்றி கூட்டமைப்பின் கூட்டம் நிறைவு!
Next post உயிருடன் இருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு இறப்புச் சான்றிதழ்!!