(VIDEO) உதட்டை கடித்து துண்டாக்கிய பெண்
வாக்குவாதமொன்றின் போது சினமடைந்த பெண்ணொருவர் நபரொருவரின் உதட்டைக் கடித்து துண்டாக்கி துப்பிய விபரீத சம்பவம் ஜேர்மனிய வருடாந்த பியர் திருவிழாவில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து உதடு துண்டிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு துண்டிக்கப்பட்ட உதட்டை மீளப் பொருத்துவதற்காக அவசர அறுவைச் சிகிச்சையொன்றுக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்தப் பெண் மேற்படி நபரின் உதட்டைக் கடித்து துப்பும் காட்சி வீடியோ படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பெண், அவுஸ்திரேலியர் என நம்பப்படும் அந்நபரை அணுகி அவரது உதட்டைக் கடிக்கவும் அவரது பற்களிடையே சிக்கிய தனது உதட்டை விடுவிக்க அந்நபர் போராடியுள்ளார்.
தொடர்ந்து அந்தப் பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
அந்த பெண்ணுக்கும் குறிப்பிட்ட நபருக்குமிடையே எதற்காக விவாதம் ஏற்பட்டது என்பது அறியப்படவில்லை.
Average Rating