குரங்குகளை விரட்டிய சிறுமி மின்மாற்றியில் விழுந்து மரணம்
வீட்டின் மேல் மாடியில் அட்டகாசம் புரிந்துகொண்டிருந்த குரங்குகளை விரட்டிக்கொண்டிருந்த சிறுமியொருவர் மின்மாற்றியின் மேல் விழுந்து மின்சாரம் தாக்கத்திற்கு இலக்காகி பலியான சம்பவமொன்று கினிகத்ஹேனையில் இடம்பெற்றுள்ளது.
கினிகத்ஹேன சிங்கள மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் விராஜினி (வயது 11) எனும் சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
வீட்டின் மேல் மாடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அட்டகாசம் செய்து கொண்டிருந்த குரங்குகளை விரட்டுவதற்காக சென்ற சிறுமியே மேல் மாடியிலிருந்து வீட்டின் கீழே இருக்கின்ற மின்மாற்றியில் தவறி விழுந்துள்ளார்.
மின் தாக்கத்திற்கு இலக்கான சிறுமி, கினிகத்;ஹேன வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைத்தே அச்சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கினிகத்ஹேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating