வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர் தனது ஐந்து வயது மகள் முன் சுட்டு கொலை
முன்னாள் வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர் தனது 5 வயது மகள் முன்பாக சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் கணவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோனிகா ஸ்பியார்(வயது29) கடந்த 2004ஆம் ஆண்டு மிஸ் வெனிசூலா பட்டம் பெற்றார். இதனை அடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனார்.
அவரது முன்னாள் கணவர் தோமஸ் ஹென்ரி பெர்ரி (39). இருவருக்கும் மாயா பெர்ரி ஸ்பியர்(5) என்ற மகள் உள்ளார். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்கள் மூன்று பேரும் வெனிசுலாவிற்கு சுற்றுலா சென்றனர்.
மத்திய வெனிசுலாவில் கடந்த திங்கட்கிழமை அவர்கள் 3 பேரும் பியூர்டோ காபெல்லா மற்றும் வாலன்சியாவுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். திடீரென அவர்களின் கார் டயர் பழுதாகி அவ்விடத்தில் நின்றது. அப்போது அங்கு கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர், மோனிகா ஸ்பியரையும், தோமஸையும் சுட்டுக் கொன்றுள்ளனர். கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மோனிகாவின் மகள் மாயாவிற்கும் காலில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மாயாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொலிசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மோனிகா கொலை செய்யப்பட்டதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மோனிக்காவின் காரை கொள்ளையர்களே பழுதடை செய்ய ஏதாவது செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Average Rating