By 14 January 2014 0 Comments

லண்டனில்.. நடந்த தற்கொலை சம்பவம்: ‘விஸ்கி’ குடித்து விட்டு பிள்ளைகளை கொன்ற தாய்?!!

3411-1வட மேற்கு லண்டனில் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட தாய் ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலைசெய்துகொண்டார் என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் மீடியாக்களில் இதுவரை  வெளியாகாத  பல தகவல்கள் இதில் உள்ளது.

கடந்த 9ம் திகதி  (வியாளக்கிழமை) மாலை 5.20 மணிக்கு பொலிசாரின்  அவசரசேவைப் பிரிவின் 999 க்கு கிடக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து அவர்கள், கென்ரனில் உள்ள வூட்-கிரேஞ் என்னும் இடத்திற்கு சென்றுள்ளார்கள். அங்கே 33 வயதான ஜெயவாணி வாகேஸ்வரன், மற்றும் அவரது 2 குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளார்கள்.

கணவர் வாகேஸ்வரன்   வேலைமுடிந்து வீடு திரும்பி அங்கே சென்று பார்த்தவேளை இவர்கள் நிலைகண்டு பதறியடித்து பொலிஸ் மற்றும் அம்பூலன்ஸ் சேவைக்கு போன் அடித்துள்ளார். ஆனால் அவர்கள் வந்து பார்த்தவேளை மூவரும் இறந்துவிட்டார்கள்.

சம்பவ தினத்தன்று காலை கணவர் வேலைக்குச் செல்லமுன், பிள்ளையை பள்ளிக்கூடம் கூட்டிச் செல்லவில்லயா ? என்று கேட்டுள்ளார். அவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் மற்றும் 7 மாதமேயான மற்றுமொரு ஆண் குழந்தையும் இருந்தது.

ஆனால் மனைவி(ஜெயவாணி) அதற்கு சரியான பதிலை கூறவும் இல்லை. அத்தோடு அவர் அன்று பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தம் செய்யவும் இல்லை. « ஏன் இப்படி » என்று யோசித்தவாறு தான் கணவர் வேலைக்குச் சென்றுள்ளார். வீட்டில் உள்ள தொலைபேசி வயரை ஜெயவாணி துண்டித்துள்ளார்.

இதனால் கணவர் வேலையில் இருந்து பல தடவை அழைத்தும் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை. சம்பவ தினத்திற்கு முதல் நாள், ஜெயவாணிக்கும் அவர் கணவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. ஒரு மாதத்தில்  குறைந்தது  3 தடவையாவது   இவர்களுக்கு மத்தியில்   வாக்குவாதம்   நடைபெறும் என்று அயலவர்கள் கூறியுள்ளார்கள். இதேவேளை ஜெயவானி சில திட்டங்களை ஏற்கனவே தீட்டியுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.


குறிப்பாக  அவர் வெளியே  சென்று  ‘ஜக்-டானியல்ஸ்’   (jack daniels) என்னும்   விஸ்கியை வாங்கியுள்ளார். அதனை அவர் குடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவர் மது அருந்தும் பழக்கம் அற்றவர். ஆனால் சம்பவ தினத்தன்று ஜெயவாணியின் வீட்டில் ஜக்-டாலியல்ஸ் போத்தல் ஒன்று அரைவாசி குடிக்கப்பட்ட நிலையில், மீதமாக இருந்திருக்கிறது. அவர் சிலவேளைகளில் மதுவை அருந்திவிட்டு தான் இப்படியானதொரு காரியத்தில் இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால்  அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக   எவரும் எண்ணவேண்டாம். மது அருந்தினால்   துணிச்சல் வரும், எதனையும்   செய்யத் தோன்றும், இதனை   நாம் மறுக்கவோ    மறைக்கவோ முடியாது அல்லவா ? இறுதியாக பிள்ளையின்  கையைக் கட்டிவிட்டு  அச் சிறிவனின்   தலையில், பாலித்தீன் பையை போட்டு மூடிக் கட்டியுள்ளார். இதன்   காரணமாகவே  அச் சிறுவன் இறந்துள்ளான்.

மற்றைய கைக் குழந்தையும் இவ்வாறே இறந்துள்ளது.

பின்னர் ஜெயவாணி தூக்கிட்டு தற்கொலை செய்யவில்லை. கயிறு அல்லது அதுபோன்ற பொருள் ஒன்றை எடுத்து, தனது   கைகளால் தனது கழுத்தை இறுக்கியே தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் மது அருந்தினாரா , எவ்வாறு  தன்னை மாய்த்துக்கொண்டார் என்பதுபோன்ற விடையங்கள்  பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே உறுதிசெய்யப்படவுள்ளது.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கணவன் பொலிசாருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் தான் இச் செய்தி எழுதப்பட்டுள்ளது. இதில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய பல விடையங்கள் உள்ளது. ஜெயவாணிக்கு என்று நெருக்கமான  நண்பிகள் எவரும் கிடையாதாம்.

மேலும் அவர் தனக்கு ஏற்படும் கஷ்டங்களை, எவரிடமும் சொல்பவரும் அல்ல. ஒரு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் கூட அதனை வெளியே செல்லி ஆறுதல் அடைய கூட வாய்ப்புகள் அவருக்கு இருக்கவில்லை.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் ஆண்கள்  ஒவ்வொருவரின் தலையிலும் பெரும் சுமை இருப்பது யாவரும் அறிந்த விடையம். காசு வேண்டும். வேலை இல்லாவிட்டால் குடும்பத்தை கொண்டு நடத்த முடியாது என்ற சூழ் நிலை. இதேவேளை   வீட்டில் உள்ள   தமிழ் பெண்கள் TV ல் வரும் நாடகங்களை    அதிகம் பார்பதும், அதனைப் போலவே தமது வாழ்கை இருப்பதாக சிலர் நினைப்பதும் மகா தவறு.

அதிலும் தமிழ் பெண்கள் ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால்   தம்மை தாமே தாழ்திக்கொள்வதும் வெளியே செல்லாது வீட்டில் TV ஐ பார்பதையுமே நாம் காணமுடிகிறது.

இன் நிலை மாறவேண்டும். அவர்கள் அடிக்கடி வெளியே சென்று , பிறருடன் பழகுவதும், நண்பர்கள் மற்றும் நண்பிகளோடு பேசி தமது பிரச்சனைகளை மூடி மறைக்காது விவாதிப்பதும் நல்லது. மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை மூடி மறைக்காமல்   மருத்துவரை அணுகி  அதற்கான சிகிச்சையை பெறுவது நல்லது.   தமிழில் பேசி உரையாடி உங்களுக்கு உதவிசெய்ய லண்டனில் « அகிலன் அறக்கட்டளை » போன்ற தமிழ் தர்மஸ்தாபனங்கள் பல உள்ளது.

ஏன் அவர்களை அணுகி மன அழுத்தத்திற்கு தகுந்த சிகிச்சை எடுக்க முடியாது ?

கணவன் மார்கள் தமது வேலைச் சுமையை வீட்டில் மனைவி மீது தான் காட்டுவார்கள். வேலையிடத்தில் மனேஜர் முன்னால் சத்தம்போட முடியாது அல்லவா ? அதனால் வீட்டில் வந்ததும் தான் வீரம் பொங்கும். கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் சின்ன சின்ன பிணக்குகளை உடனே தீர்த்துவிடுங்கள்.

மனைவியை வெளியே கூட்டிச் சென்று தேவையானவற்றை வாங்கிக்கொடுங்கள். மனைவி மன அழுத்ததிற்கு உள்ளாகிறார் என்றால், மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள். நாடகம் பார்ப்பதை நிறுத்திவிட்டு நல்ல காமெடியான படம் ஒன்றை போட்டு ரசித்து சிரியுங்கள்.

‘வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்’ என்பார்கள். உங்கள் வாழ்கையை நீங்களே வாழப்பழகுங்கள். ஆங்கிலேயர் வசிக்கும் நாட்டில் வந்து குடியேறினால் போதுமா ? அவர்களிடம் உள்ள சில நல்ல பழக்க வழக்கத்தையாவது நாம் கற்றுக்கொள்ளவேண்டாம் ?Post a Comment

Protected by WP Anti Spam