மண்டேலாவின் சிலையின் காதில் மறைந்திருக்கும் பித்தளை முயல்

Read Time:2 Minute, 33 Second

058தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரை கவுரவபடுத்தும் விதமாக பிரிட்டோரியாவிலுள்ள யூனியன் கட்டிடத்துக்கு எதிரே அவருக்கு மிகப்பெரிய சிலை ஒன்று எழுப்பபட்டு உள்ளது.வெண்கலத்தால் 9 மீட்டர் உயரமும் 4.5 டன் எடையும் கொண்டதாக இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் ஒருமைபாட்டு தினமான டிசமபர் 16-ந்தேதி சிலை நிறுவபட்டது. நெல்சன் மண்டேலாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலையில், அதை உருவாக்கிய சிற்பிகள் தங்களது தயாரிப்பு என்பதைக் குறிக்கும் வகையில், அச்சிலையின் காதில் ஒரு பித்தளையிலான முயல் ஒன்றை வைத்து உள்ளனர். இதை கண்டறிந்த தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் அதை விரைவாக நீக்குமாறு உத்தரவிட்டு உள்ளனர்.

மண்டேலாவின் அந்தச் சிலையில் தங்களது பெயர்களையும் கையெழுத்தையும் பொறிக்க அதிகாரிகள் மறுத்ததாலும், மிகவும் விரைவாக அந்தச் சிலைய தாங்கள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தங்களை அவசரப்படுத்தியதாலும் பித்தளை முயல் சிலையில் பொருத்தப்பட்டது என்றும் சிற்பிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க மொழியில் முயல் என்றால் ‘விரைவாக’ என்று பொருள்.அந்தச் சிறிய பித்தளை முயல் மண்டேலாவின் அந்தச் சிலையின் வலது காதில் வைக்கப்பட்டுள்ளது. அதை தொலைநோக்கி கொண்டோ அல்லது அதிநவீன கேமராவைக் கொண்டோதான் பார்க்க முடியும். மண்டேலா சிலையின் காதிலிருந்து அந்தப் பித்தளை முயலை அகற்றுவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடன்பிறந்த தங்கையுடன், குடும்பம் நடத்திய சகோதரனுக்கு விளக்கமறியல்
Next post நாய் போன்று குரைக்கும் ஆடு