சிம்புவுக்கு இன்னொரு ஜோடி தேடுகிறார் பாண்டிராஜ்: ஹன்சிகா நடிக்கவும் வாய்ப்பு

Read Time:3 Minute, 7 Second

003kசிம்பு ஹீரோவாக நடிக்க, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, தம்பி குறளரசன் இசை அமைக்க, மாஜி காதலி நயன்தாரா நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்க தயாராகிவருகிறது இது நம்ம ஆளு. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது.

அடுத்த கட்டமாக பாடல் காட்சிகள் எடுக்க வேண்டும். வெளிநாட்டில் எடுக்கலாம் என்பது சிம்புவின் ஆசை. நயன்தாரா அதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கவில்லை.

கடைசி கட்ட ஷூட்டிங்கில்தான் அடுத்த பரபரப்பு இருக்கிறது. படத்தில் திடீரென்று நயன்தாரா கமிட்டாகி படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்ததைபோல அடுத்த அதிரடி இருக்கிறது. கதைப்படி சிம்புவின் முதல் காதல் தோற்றுவிடும், காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று திரியும் சிம்புவுக்கு பெற்றவர்கள் நயன்தாராவை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விடுவார்கள். 6 மாதத்துக்கு பிறகுதான் கல்யாணம். அதுக்குள்ள லவ் பண்ணிக்குங்க என்பதுதான் பெற்றவர்களின் கண்டிஷன்.

அவர்களுக்கு லவ் வந்துச்சா வரலியா? லவ் வந்து கல்யாண நேரத்தில் பழைய காதலி திரும்பி வந்தாரா? சிம்புவுக்கு இருந்த மாதிரியே நயன்தாராவுக்கும் ஒரு முதல் காதல் இருந்ததா? இந்த விபரத்தையெல்லாம் சொன்னால் பாண்டிராஜ் சார் கோவிச்சுக்குவார்.

இப்போ விஷயத்துக்கு வருவோம். கடைசி ஷெட்யூல் பரபரப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? சிம்புவின் முதல் காதலி யார்? என்பதுதான்.

அதாவது முதல் காதலியாக நடிப்பவர் யார் என்பது? அந்த கேரக்டரை நயன்தாரா அளவுக்கு பவர்புல்லான ஒரு ஹீரோயின் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் கருதுகிறார்.

இதனால் தீவிரமாக ஹீரோயின் வேட்டை நடக்கிறது. ‘அவரை அந்த கேரக்டர்ல நடிக்க வச்சிட்டீங்கன்னா கோடியை கொட்டிக் கொடுத்து படத்தை வாங்கிக்கிறோம்’னு டிஸ்ட்ரிபியூட்டர்களும், தியேட்டர்காரர்களும் சொல்லியிருக்காங்களாம். அவர்கள் சொல்லும் அந்த ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் மகளை சுட்டுக் கொன்று, இந்திய பெண் தற்கொலை முயற்சி
Next post ஒலுவில் கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது