சிறுவன் துஷ்பிரயோகம்: இளைஞர்கள் இருவர் கைது
நுவரெலியா திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 22 வயதான இளைஞர்கள் இருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களான இளைஞர்கள் இருவரும் குறித்த சிறுவனுடன் கடந்த 21 திகதி விளையாடி கொண்டிருந்துள்ளனர்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இருவரும் அச்சிறுவனை தேயிலை தோட்டத்திற்கு ஏமாற்றி அழைத்து சென்று துஷ்பிரயோகத்து உட்படுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
சிறுவன் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அவனை தேடிய போது சிறுவன் தேயிலை செடிகளுக்குள் மயக்க நிலையில் இருந்ததை கண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவன் அன்று இரவு கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதித்த பின் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தனக்கு சுயநினைவு திரும்பிய போது நடந்ததை தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பேரிலேயே அவ்விரு இளைஞர்களையும் சந்தேகத்தின் பேரில் தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating