உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய சிறுவர்கள் பலி
Read Time:1 Minute, 5 Second
சீனாவில், உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய, 6 சிறுவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
சீனாவின், ஷான்சி மாகாணத்தில், பிங்யோ மாவட்டத்தில், கடும் பனியின் காரணமாக, இங்குள்ள ஆறு, உறைந்து விட்டது.
இதையடுத்து, இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடுகின்றனர். நேற்று முன்தினம், 5 முதல் 11 வயதுள்ள சிறுவர்கள் பனி சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.
பனி, போதுமான அளவில் உறையாமல் இருந்த பகுதியில் விளையாடிய, 6 சிறுவர்கள், ஆற்றுக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆழ்கடலில் நீந்தும் பயிற்சி பெற்ற வீரர்கள், ஆற்றுக்குள் மூழ்கி, சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.
Average Rating