இலங்கை அரசை தண்டிக்கும் நோக்கம், இலங்கை தமிழர் தலைவருக்கு கனவிலும் கிடையாது!

Read Time:1 Minute, 59 Second

tna.sampanthan-piraba“இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்பது எமது நோக்கம் கிடையாது” என்று கூறியுள்ளார், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆதரவு கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.

“அதனால்தான், இலங்கையை தண்டிக்கும் நோக்கில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நாம் கோரவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைமீது ஐ.நா.வில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சில தமிழ் அமைப்புகள் கோஷமிட்டு கொண்டுள்ள நிலையில், இலங்கை தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண அரசு உறுப்பினர்களையும் கொண்ட கட்சியின் தலைவரே இப்படி கூறுகிறார்!

“இலங்கை அரசாங்கம் வலுவான, ஸ்திரமான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக கருதப்படுகிறது” என சிலாகித்துள்ள தமிழர் தலைவர், “ஆனால் அவர்கள் (இலங்கை அரசு) சற்றே பிழையான பாதையில் செல்வதே எமக்கு வருத்தமளிக்கின்றது” என்கிறார்.

அதாவது, “கோபம் எதுவும் கிடையாது, லேசான வருத்தம்தான்” என்கிறார் இவர்.

இதற்கு நாம் என்ன சொல்ல முடியும்?

வேண்டுமானால், இப்படி சொல்லலாம்: “செத்தான்டா சேகரு” (‘நிதி சேகரிக்க’ வெளிநாட்டுக்கு, அல்லது சீமானின் ஊருக்கு போனால்!)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் நால்வர் பலி
Next post கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!