11 வயது சிறுமியிடம், பாலியல் லீலை செய்த ஆசிரியர் சிறையில்..
பிரிட்டனில் 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் லங்காஷைர் நகரில் உள்ள பிளாக்பர்ன் பகுதியில் வசித்து வரும் சுலேமான் மேக்னோஜியோவா(வயது 40) என்பவர், முஸ்லிம் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
திருமணமாகி 6 வயது குழந்தைக்கு தந்தையான இவர், தன்னிடம் பயின்று வந்த 11 வயது சிறுமியின் கால்களை தடவுவதும், கைக்குட்டையை கொடுப்பது போன்றும் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் குழப்பமடைந்த சிறுமி மேற்கொண்டு அவர் என்ன செய்வார் என்ற பயத்தில் ஒன்றும் பேசாமல் இருந்துள்ளாள்.
இவளது சகோதரன்கள் இருவர் நடந்ததை வீட்டில் கூறவே, அதிர்ச்சியடைந்த அவரது தாயார் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
எனினும் இவருக்கு குடும்பம் இருக்கிறது என்ற அடிப்படையிலும், அவரது மனைவிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்தாலும், தண்டனையை குறைத்து 40 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கும்படியும், 2 வருடம் வேலை நீக்கமும் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating